வாசகர் வட்டம்

Sunday, April 24, 2011

ஹாட்லிக் கல்லூரியின் (UKகிளை)நாதவினோதம்(24.04.11)-வீடியோஹாட்லிக் கல்லூரியின் லண்டன் கிளையினர் 24.04.11 அன்று நாத வினோதம் என்ற நிகழ்ச்சியை நடத்திருந்தினர். london croydon இல் உள்ள fairfield hall உள்ள பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த மக்கள் காணப்பட்டனர் , இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் வருகை தந்திருந்தார்.இந்த பிரமாண்டமான அரங்கம் நிறைந்ததின் காரணமாக பலர் டிக்கட் கிடைக்காமால் திரும்ப வேண்டி இருந்தது.இந்நிகழ்ச்சிக்கு போகும் போது நாத வினோதம் என்ற பெயரை பார்த்த பொழுது ஏதோ சங்கீதக் கச்சேரி நடக்க போகுது அலுப்படிக்க போகுது என்று நினைத்து போனேன் .ஆனால் சினிமா பாடல்களை பாடி அரங்க நிறைந்த கரகோசங்களுடன் நிகழ்ச்சி நடந்தது.


எனது வகுப்பு தோழனும் நண்பனுமாகிய சிறிக்குமார் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் ..தொடர்ந்து ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவரும் லண்டன் ஜபிசி வானொலியில் அறிவிப்பாளருமான தினேஷ் தொடர்ந்து தனது மதுரக் குரலால் நெறிப்படுத்தினார்.மேலே உள்ள வீடியோ கிளிப் அந்த நிகழ்ச்சியின் இடைவேளையின் பொழுது எடுக்கப்பட்டது.

3 comments:

Anonymous said...

ஹாட்லிக்கல்லூரியின் பழைய மாண்வனின் பெயரை குறிப்பிட முடியுமா?

Anonymous said...

ஹாட்லியின் பழைய மாணவனின் பெயரை குறிப்பிட்டால் ஹாட்லிக்கு பெருமை தரும்

சின்னக்குட்டி said...

வணக்கம் அநோமதைய நண்பர்களுக்கு ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவனாகிய அறிவிப்பாளரின் பெயர் தினேஷ்


இப்பொழுது பதிவில் அவரை பெயரை சுட்டிக் காட்டியுள்ளேன்..அவரின் பெயரை சரியாக உச்சரிக்கிறேனா என்ற குழப்பத்தில் அவரின் பெயரை முன்பு தவிர்த்திருந்தேன் .வேறு நோக்கமில்லை

இப்பொழுது அவரின் பெயரை சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்து கொண்டு இணைத்து இருக்கிறேன்