வாசகர் வட்டம்

Wednesday, July 13, 2011

நித்தியின் சித்து விளையாட்டு இல்லையாம்..அது SUN TV யின் உடையதாம்-நடிகை ரஞ்சிதா-வீடியோ

சுவாமி நித்யானந்தாவுடன் தான் நெருக்கமாக இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்ட சன் குழுமம், நக்கீரன் மற்றும் தினகரன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ரஞ்சிதா காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
இந்த மாற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒளிபரப்பப்பட்டது தனது அந்தரங்கத்தையும், மத சுதந்திரத்தையும் மீறும் செயல் என்று தனது மனுவில் ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.

ஆனால் சர்ச்சைக்குரிய அந்த வீடியோ பல இணைய தளங்களில் வெளியிடப்பட்டது. இது குறித்த செய்திகள் பல்வேறு பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இருந்தும் முதல் முதலாக அந்த வீடியோவை கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி வெளியிட்டது சன் குழுமம் என்பதால் அதன் மீது புகார் அளித்துள்ளதாக ரஞ்சிதா தெரிவித்தார்.

கடந்த ஆண்டே தான் இந்த ஊடகங்கள் மீது புகார் அளிக்க முயன்றதாகவும், ஆனால் இது குறித்த வழக்கை ஏற்று நடத்த வழக்கறிஞர்கள் முன்வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.நன்றி- பிபிசி தமிழ்

No comments: