லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சி. அதில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் சில கூறுகின்றன. பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில் ஒன்று, தமிழ்த் திரை இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய " நான்தான் ஒங்கப்பண்டா" என்ற பாடல்தான்.
கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் 1981ல் வெளியான 'ராம் லக்ஷ்மண்' என்ற படத்தில் வரும் பாடல் இது. சடுகுடு அல்லது கபடி விளையாட்டு வீர்ர் ஒருவர் அந்த விளையாட்டின் போது பாடுவது போல் அமைந்திருக்கும், விறுவிறுப்பான இசையுடன் கூடிய இந்தப் பாடல், அந்தப் படம் வெளியான போது பெரிய அளவில் ஹிட் ஆனதாக நினைவில்லை.
ஆனால் இப்போது சர்வதேசப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிற பிரபல பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்தப் பாடலின் ஒலிக்கீற்றும் இந்த தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறலாம் என்று பிரிட்டிஷ் பத்திரிகைகளில் கசிந்து வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாக்க் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆஸ்கார் விருது பெற்ற “ஸ்லம் டாக் மிலியனேர்” போன்ற படங்களை இயக்கிய டானி போய்ல் அவர்கள் ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சிகளை கருத்துருவாக்கி வருகிறார்.
அவரது மேற்பார்வையில், சுமார் 27 மிலியன் பவுண்ட் செலவில் உருவாகிவரும் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இடம்பெறும் மற்றுமொரு தமிழ்க் கலைஞர், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம். இவரது, பிரபலமான “ பேப்பர் ப்ளேன்ஸ்”, (காகித விமானங்கள்) என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.
குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட பாடல், அவரது இரண்டாவது ஆல்பமான “கலா” என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த்து.
உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இரண்டு தமிழர்களின் இசையும் இடம்பெறப்போகிறது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மூன்றுபேரை கொலை செய்து புதைக்கப்பட்ட விவகாரத்தில், நான்கு ஆண்டுகளுக்கு பின் அவர்களது எலும்புக் கூடுகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்,42; தச்சுத் தொழிலாளி. இவரது மகள் லாவண்யா,19. சேகருடன் பணிபுரிந்த சிலம்பரசன்,27, என்பவருக்கும், லாவண்யாவிற்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததால், கடந்த 2008ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
புகார்: பின் விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள லாவண்யாவின் உறவினர் முருகன்,45, என்பவரின் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். தகவலறிந்த சேகர் கடந்த 2009ம் ஆண்டு எம்.குச்சிப்பாளையத்திற்கு சென்றார். பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து தனது கணவர் மற்றும் மகளை காணவில்லை என்று நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசில் சேகரின் மனைவி ஜீவா புகார் அளித்தார். இந்நிலையில் முருகன் மகள் பார்கவி,20, அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் சதீஷ் என்பவரை கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்தார். இதற்கு முருகன் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 27ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தங்கள் காதல் விவகாரம் பற்றி பேட்டி அளித்தனர். பின் முருகன், அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்ற போது, பார்கவி தனது தந்தை முருகன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆதரவு தேடிவந்த மூவரை கொலை செய்ததாகக் கூறினார். அதனை தொடர்ந்து, 29ம் தேதி நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற முருகன் வீடு திரும்பவில்லை.
மண்டை ஓடு: இதைத்தொடர்ந்து நேற்று பகல் 12 மணிக்கு விழுப்புரம் டி.எஸ்.பி., சேகர், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் எம்.குச்சிப்பாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தாசில்தார் ராஜேந்திரன், வி.ஏ.ஓ., முத்தையன் முன்னிலையில் முருகன் வீட்டின் அருகே பார்கவி அடையாளம் காட்டிய இடத்தில், பொக்லைன் மூலம் தோண்டினர். மதியம் 2 மணிக்கு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் புதைந்து கிடந்த இருவரது மண்டை ஓடுகளும், உடல் எலும்புகளும் கிடைத்தன. மாலை 5 மணிக்கு முருகன் வீட்டின் அருகே மற்றொருவரது எலும்புத் துண்டுகள் கிடைத்தன. முருகன் வீட்டின் மண் புதரிலிருந்து கிடைத்த எலும்புக் கூடுகள் சேகர், லாவண்யா, சிலம்பரசன் ஆகியோரின் சடலங்களாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று விழுப்புரம் டி.ஐ.ஜி., சண்முகவேல், எஸ்.பி., பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் கைப்பற்றிய மனித எலும்புகளை சென்னையில் உள்ள மருத்துவப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். மூன்று பேரை கொலை செய்து புதைத்து விட்டு அங்கேயே குடும்பம் நடத்திய முருகன், திடீரென தலைமறைவான சம்பவம் எம்.குச்சிப்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியை விரைவில் பிடிப்போம்: டி.ஐ.ஜி., சண்முகவேல் பேட்டி: டி.ஐ.ஜி., சண்முகவேல் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண், கடந்த 1ம் தேதி, விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர், மகளை காணவில்லை எனக் கூறியிருந்தார். தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், இவரின் கணவர், மகள் இருவரும் கொலை செய்யப்பட்டு, எம்.குச்சிப்பாளையத்தில் உள்ள முருகன் என்பவரின் வீட்டு முன் புதைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. முருகன் வீட்டு முன் தோண்டப்பட்டதில், சில மனித எலும்புகள் கிடைத்துள்ளன. இந்த எலும்புகளை மருத்துவப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு, காணாமல் போனவர்களதுதானா என்பது உறுதி செய்யப்படும். அதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரிக்கும் தாலுகா போலீசார் குற்றவாளியை கூடிய விரைவில் கண்டுபிடித்து கைது செய்வர். இவ்வாறு சரக டி.ஐ.ஜி., சண்முகவேல் கூறினார்.
மகள் ஆவேசம்: தனது தந்தை முருகன், மூன்று பேரை கொலை செய்து, புதைத்த இடத்தை பார்கவி, போலீசாருக்கு அடையாளம் காட்டினார். இறந்தவர்களின் எலும்புக் கூடுகள் கிடைத்தவுடன், பார்கவி, ஆதங்கத்துடன் போலீசாரிடம் கூறுகையில், "ஆரம்பத்தில், எனது தந்தை முருகன், மூன்று பேரை கொலை செய்ததாக நான் கூறியதை யாரும் நம்பவில்லை. ஏற்கனவே நான் கூறியபடி தற்போது மூன்று பேரின் எலும்புகள் கிடைத்துள்ளன பார்த்தீர்களா... இப்போது நான் கூறியது உண்மை தான் என, நிரூபணமாகியுள்ளது' என்றார். நன்றி -தினமலர்
இந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற இன கலவரத்தின் பின் காமினி பொன்சேகா கதாநாயகனாக நடித்த இந்த படம் சிங்கள தமிழ் ஒற்றுமையை மையபடுத்தி எடுக்கப்படம் .
.முதல் ஒரு திரைபட சூட்டிங்கை சிறுவயதில் பார்க்க கிடைத்தது என்றால் இந்த படத்தின் சூட்டிங் தான்.
.பாடலின் முடிவில் வரும் இந்து கோயில் முன்னால் உள்ள கேணி யாழ்-வடமராட்சி பகுதியிலுள்ள கரவெட்டி நுணுவில் பிள்ளையார் கோவில்.
..இந்த படத்தின் அநேகமான காட்சிகள் யாழ்ப்பாணத்தில படமாக்க பட்டிருந்தன,
கரவெட்டியை சேர்ந்த முன்னாள வானொலி தொகுப்பாளர் யோகா பாலசந்திரன் அவர்களால் இந்த திரைபடத்தின் தமிழ் பகுதிக்கு கதை வசனம் எழுதப்பட்டது
இந்த படத்துக்கான பாடல்களும் எழுதியுள்ளார்
இந்த வீடியோ காட்சியில் அந்த காலம் நெல்லியடியில் இருந்த சத்தியமூர்த்தி தவில் கோட்சியில் இருந்த ஒருவரையும் நுணவில் பிள்ளையார் கோயில் ஜய்யரையும் என்னால் அடையாளம் காண முடிகிறது
அண்மையில் கன்னட தொலைக்காட்சியில் நித்தியானந்தவின் பாலியல் தொல்லை பற்றி ஒரு பெண்ணின் பேட்டி வெளியானது ..அதை தொடர்ந்து நித்தியானந்தா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இருந்தார் . அதில் நடந்த களேபரம் தான் மேலே பார்ப்பது
இலங்கை பல்கலைகழகமொன்றில் புதிதாக வந்த மாணவர்களை பழைய மாணவ மாணவிகள் பகிடி வதை (றாக்கிங்) என்ற போர்வையில் ஒரு வித குரூர மனப் பான்மையுடன் வரவேற்பதை மேலுள்ள வீடியோவில் காணலாம்