வாசகர் வட்டம்

Saturday, September 01, 2012

ஒரு கேரள பெண்ணும் ..ஏமாற்றப்பட்ட சென்னை இளைஞர்களும் -வீடியோ

solvathellam by msmorethan143
solvathellam 2 by msmorethan143

தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இளைஞர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பல இலட்சம் மோசடி செய்த கேரள அழகியான சஹானா என்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை மயக்கி அவர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றைப் பறித்து மோசடி செய்துள்ளார்.

இவ்விடயம் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியுலகுக்குத் தெரியவந்தது.

சஹானா இதுவரை 50 இளைஞர்களை மணந்து ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 5 பேர் மட்டுமே சஹானா தங்களை ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளனர்.

எனினும் தொடர்ச்சியாக பலர் புகார் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சஹானாவைக் கைது செய்ய பொலிஸார் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.-நன்றி- வீரகேசரி

No comments: