வாசகர் வட்டம்

Sunday, March 08, 2015

அப்பாடா...பழையபடி நான் கறுப்பியானேன்-வீடியோபிறந்த வீட்டில் கறுப்பி

 அண்டை நாட்டில் சிலோன் அகதிப் பொண்ணு 

இலங்கை மத்தியில் தெமள 

வடக்கில் கிழக்கச்சி

மீன் பாடும் கிழக்கில் நானோர் மலைக்காரி

மலையில் மூதூர்க் காரியாக்கும் 

 ஆதிக்குடிகளிடம் திருடப்பட்ட தீவாயிருக்கும் 


என் புகுந்த நாட்டில் 

அப்பாடா! பழையபடி நான் கறுப்பியானேன்!


No comments: