வாசகர் வட்டம்

Tuesday, March 01, 2016

மறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியில் சின்னக்குட்டியும்-ஒலி வடிவம்

 
மறைந்த பிரபல எழுத்தாளர்  செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது.



எனது வகுப்பு தோழனும் பிரபல எழுத்தாளருமான ரஞ்சகுமார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர்


அந்த நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலில் தொடக்க நேயராக இந்த சின்னக்குட்டியும் வானலைகளில் சிறிது நேரம் கலந்து கொண்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்


தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவையில்
நேற்று இரவு எமது நிகழ்ச்சிப் பணிப்பாளர்
எழில்வேந்தனுடன் நானும் இணைந்து
அமரர் செங்கை ஆழியான் அவர்களைப் பற்றிய நினைவுப் பகிர்வு நிகழ்ச்சி ஒன்றை வழங்கினோம். 

இணைய இதழியலாளர் சின்னக்குட்டி, பேராசிரியர் பால சுகுமார், மூன்றாவது மனிதன் + எதுவரை ஆசிரியர் எம். பௌசர், எமது இலங்கைச் செய்தியாளர் பரமேஸ்வரன், நூலகம் கோபிநாத், எழுத்தாளர் நல்லை அமுதன் , சாமி ஆகியோரும் தொலைத்தொடர்பு ஊடாக எம்முடன் இணைந்து நினைவுகளைப் பகிர்ந்தனர்.


அமரர் செங்கை ஆழியானது மறைவால் துயருறும் அனைவருடனும் நாமும் இணைந்து எமது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.

-ரஞ்சகுமார்




இலங்கையில் வெளிவந்த வாடைக்காற்று திரைபடம் செங்கை ஆழியானின் அவர்களின் பிரபல நாவலை அடிப்படையாக கொண்டது

இந்த நாவல் மூல பிரதியை ஏற்கனவே பார்வையிட்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் மக்களே என்று அழைக்கும் டைரக்டர் ஒருவர் இப்படம் வரும் முன்பே அதன் மூலத்தை எடுத்து ஒரு திரைபடத்தை எடுத்ததாக  கிசுகிசு உலாவியது ...

அந்த வாடைகாற்று திரைபடத்தின் சில காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் விரும்பின் பார்க்கவும்

1 comment:

SANJEEV said...

Poothaththeevup puthirkal.... Naan siruvanaaka iruntha pothu ennai kaddippodda thodar athu