வாசகர் வட்டம்

Monday, June 27, 2011

வதிரி சி.ரவீந்திரனின் மீண்டு வந்த நாட்கள் வெளியீட்டு விழாவில்-வீடியோ

வதிரி சி.ரவீந்திரனின் மீண்டு வந்த நாட்கள் கவிதை தொகுதி வெளியீடு யாழ் கரவெட்டி தேவராயாளி கல்லூரியில் இலங்கையின் பிரபல பழம் பெரும் எழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு பிரதம விருந்தினராக பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி .சிறீநிதி பங்கேற்று இருந்தார் ,கவிதை தொகுதியின் முதல் பிரதியை எனது வகுப்பு தோழனும் நெல்லியடி சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை உரிமையாளருமான சிவம் பெற்று கொண்டார் .. இலங்கையின் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் திக்குவல்லை கமால் அறிமுக உரையை வழங்கியிருந்தார். ரவீந்திரன் மூத்த எழுத்தாளர்களை பொன்னாடை போர்த்தி இந்நிகழ்வில் கெளவரவித்து இருந்தார்....சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள்  நேர்முகங்கள் என ரவீந்திரன் தனது எழுத்து பணியை பல காலமாக செய்து வந்த பொழுதும் இந்த புத்தக வெளியீடு தான் முதன் முறை என்பது குறிப்படதக்கது. எனது முகநூல் நண்பரில் ஒருவரான ரவீந்திரனின் விழா பற்றியை குறிப்பை வழங்குவதில் இந்த சின்னக்குட்டியின் பதிவு மிக்க மகிழ்வு கொள்கிறது. 

2 comments:

sinnathambi raveendran said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி சின்னக்குட்டி.சின்னா.

அன்புடன்
வதிரி.சி.ரவீந்திரன்.

முல்லை அமுதன் said...

nantry