வாசகர் வட்டம்

Friday, August 12, 2011

இங்கிலாந்து ;கலவரமா ? கிளர்ச்சியா?
லண்டனில் தெருக்களில் கடந்த வார இறுதியில் தொடங்கிய so call வன்முறை  இங்கிலாந்து பல பாகங்களிலும் பரவி இப்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.Darcus Howe என்ற கறுப்பின லண்டனிலும் வாழும் எழுத்தாளருடன் நேர்முக உரையாடலை பிபிசி தொலைகாட்சி அத்தருணம் நடத்தியது. நேர்முக உரையாடலின் பொழுது அறிவிப்பாளரின் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த இவ் எழுத்தாளர் இதை கலவரம் என்று கூற மாட்டேன் இதை மக்கள் எழுச்சி என்றே தான் கூறுவேன் என பதிலளித்தார்.லண்டனில் கறுப்பு இனத்தவர் ஒருவர் தமிழ் நாட்டு என்கவுண்டர் பாணியில் சுட்டு கொல்லப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் லண்டன் வாழும் கறுப்பு சமூகத்தனிரால் ஏற்ப்படுத்தப் பட்டட எதிர்ப்பு ஊர்வலம் ஆர்ப்பட்டம் பின் கலவரமாக வெடித்தது .பல கடைகள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டன வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன.உண்மையில் முதலில் கறுப்பின மக்கள் அதிகமாக வாழும் நகரங்களிலே உருவாகியது , பின் பல்லின மக்கள் வாழும் வேறு நகரங்களிலும்  இந்த கடை உடைப்பு சூறையாடுதல் போன்றவை நடைபெற்றது.


இந்த கடையுடைப்பு சூறையாடுதல் போன்றவற்றில் ஏழு வயதுக்கும் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகம் ஈடுபட்டார்கள் .இப்பொழுது பாடசாலை விடுமறை காலம் நீண்ட பகல் போன்றவை இந்த கலவரம் தொடர்ச்சியாக இலகுவாக நடைபெற சாதகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.இங்கிலாந்தில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி அண்மை காலங்களாக அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றன என கூறப்படுகிறது.அழகிய அலங்கார கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் தங்களுக்கு பார்ப்பதுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை அவர்களுக்கு இவ்வளவு காலம் இருந்திருக்கவேண்டும் .வலுவிழந்தவர்களாக தங்களை பற்றி நினைப்பில் இருந்தவர்கள் குழுவாக சேர்ந்து இயங்கும் பொழுது வலுவானவர்களாக தங்களை உணரும் நிலை ஏற்பட்டிருக்கலாம் .அதனால் அவர்களுக்கு  இவ்வளவு காலம் எட்டாக்கனியாக இருந்த பொருட்களை அபகரிக்க துணிந்து இருக்கலாம் என்று பலவகையான காரணங்களை சமூக உளவியல் அறிஞர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளுவோர் கருத்துரை வழங்கி கொண்டிருக்கிறார்கள்.


இங்கிலாந்தில் வறிய மக்களுக்கு வழங்கப்படும் சமூக உதவி கொடுப்பனவுகளில் கட்டுபாடுகள் குறைப்புகளை கொண்டு வந்தது அண்மையில் புதிதாக பதவிக்கு அமர்ந்த வலதுசாரிக்கட்சி ,அந்த கறுப்பு இனத்தவரை சுட்டு கொன்ற காரணத்தை விட ..மாணவர்களின் கல்வி கட்டணம் மற்றும் அடித்தட்டு மக்களின் சமூக நல கொடுப்பனவுகளில் கை வைத்தமை போன்றவையே இங்கிலாந்தின் வரலாற்றில் காணாத கலவரத்தை காணவேண்டிய நிலமை வந்தது என ஒரு சாரார் வாதாடுகின்றனர் .


பல காலமாக கறுப்பின மக்கள் மீது பாகுபாடு காட்டபடுகிறது என்று கூறப்படும் நிலையில் அதே நேரத்தில் அதிக குற்ற செயல்களில் அவர்கள் தான் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.அவர்கள் இப்படி ஈடுபடுவதற்க்கு காரணம் அவர்களுடைய கல்வியறிவு குறைபாடு நிறமூர்த்த அடிப்படை போன்றவற்றையை காரணம் கற்பிப்போரும் உளர் .அதில் உண்மை அல்ல என்பதுக்கு உதாரணம் அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் தான் கறுப்பு இனத்தவரிலும் பார்க்க குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.கறுப்பின மக்களின் குடி பரம்பல் ரோமானியா  காலத்திலையே நிகழ தொடங்கி விட்டது .அதன் பின் அடிமைகளாகவும் போர் வீரர்களாகவும் இங்கு குடி புகுந்தனர் .அழகான பெண்கள் அழகற்ற ஆண்களையே எப்போதும் வைத்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையாக கூறுவர்.வெள்ளை இனப் பெண்கள் கறுப்பின ஆண்களை விரும்பி ஜோடியாக தேர்ந்தெடுப்பதை அடிப்படையாக வைத்தே இதை கூறுவார்கள் .கறுப்பின ஆண்களால் இவர்கள் கட்டிலில் நன்கு கவனிக்கப்படுவதனால் விரும்புவதற்க்கு காரணம் என்று கூறிக்கொண்டாலும் இன்றும் நிறுவப்படாத உண்மையாக தான் இப்பொழுதும் இருக்கிறது.இவர்கள் பிரபலமான இசை பாடகர்கள் விளையாட்டு வீரர்களாக இருப்பதால் இவர்களின் நடை உடை பேச்சு முறைகளை அப்பட்டமாக கொப்பி அடித்து விரும்பி பின்பற்றுக்கிறார்கள் .ஏன் நம் இளைஞர்கள் கூட இவர்களின் நடை உடை பேச்சு போன்றவற்றை பின்பற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை அவதானித்து இருக்கலாம்.
இது தன் முனைப்பு கிளர்ச்சியாக தான் ஆரம்பத்தில் இருந்தது ,பின் நன்கு  திட்டமிடப்பட்டு பல இடங்களில் செய்திருக்கிறார்கள் என்று தகவல்கள் கூறுகிறது. துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் சமூக தொடர்பு இணையங்களான பேஸ்புக் ட்விட்டர் மூலம் போரட்டத்துக்கு அழைத்தது போல் இப்பொழுது இங்கிலாந்து நடந்த சம்பவத்துக்கு செய்திருக்கிறார்கள். மூன்றாம் உலக நாடுகளில் இது போன்ற சம்பவத்துக்கு ஊக்கமும் பாரட்டு கொடுத்த இங்கிலாந்து தனக்கே அந்த நிலை ஏற்படும் பொழுது செய்வதறியாமால் மிரளுகிறது.மேற்கத்தைய நாடுகள் தங்கள் அமைப்பின் பொய்மையான விம்பங்கள் மெல்ல மெல்ல நன்கு தெரிய தொடங்கி விட்டதை உணர்ந்து கொண்டன..அமெரிக்காவின் கடன் வாங்கு திறன் தர வரிசை குறைக்கப்பட்டமை ,பிரித்தானிய எந்த புதிய உற்பத்தி  இன்றி  வெறும் பண தரகராகவே இவ்வளவு காலமும் இருந்து வந்தது இனிமேல் எடுபடாது என்ற நிலைமை உருவாக்கி இருக்கிறது. இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் பொழுதெல்லாம் தமது இருப்பை காப்பற்றுவதற்க்கு அடிதட்ட மக்களின் இருப்பையை கை வைக்கிறது.இந்த எதிர்ப்பு முறை சரியே பிழையோ என ஒரு புறம் இருக்க இந்த கை வைப்புக்கு எதிராக திரள்வது தவிர்க்க முடியமால் இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாமால் இருந்திருக்காது.அதனால் அவர்கள் இரும்பு கரங்கள் கொண்டு அடக்க தயாராகவிட்டார்கள் என்று பிரதமர் அவர்களின் அண்மைய அறிக்கைகள் காட்டுகிறது.


இந்த கடை உடைப்பபில் வறியஇளைஞர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் ஈடுப்டவில்லை .பிரபல இங்கிலாந்து ஒலிம்பிக் வீராங்கனை ,பிரபல பாடசாலையில் படித்த பெரிய கோடிஸ்வரனின் மகள் ,பிரபல பல்கலைகழகத்தில் படிக்கும் பட்டதாரி மாணவர்கள் போன்றவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற தண்டனை போதுமானதாக இல்லையென்று பொலிஸ் தரப்பு கூறிக் கொண்டிருக்கிறது.இவர்கள் இப்படி கிளர்வதுக்குரிய அடிப்படை காரணத்தை கண்டறியமால் தண்டனை கொடுப்பதால் எதுவும் தீரப்போவதுமில்லை , குழப்பத்தில் ஈடுபடுவர்களும் தனது எதிரி யார் என சரியாக இனம் காணமால் இப்படி போராடுவதாலும் பலன் எதுவும் வரப்போவதுமில்லை. 
இவை தொடர்பான விரிவான கலையரசனின் பதிவுhttp://kalaiy.blogspot.com/2011/08/blog-post_13.html

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.