வாசகர் வட்டம்

Wednesday, April 11, 2012

பூமி அதிர்ச்சி -கொழும்பு இந்து சமுத்திரபிராந்தியத்தில் -சுனாமி எச்சரிக்கை -வீடியோ


கொழும்பு மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் முழுக்க நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. அப்பாத்மென்கள் கட்டில்கள்,கதிரைகள் ஆடியதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்...சில இடங்களில் அலை பேசியும் வேலை செய்யவில்லை...தமிழ் நாட்டில் கூடங்குளம்,கல்பாக்கம் அணு உலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது...கொழும்பு மற்றும் சென்னையில் பல இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து கூட்டமாக வெளியே வந்து நிற்பதா சொல்கிறார்கள்..இலங்கை நேரம் இன்று நண்பகல் 2.15 மணியளவிலேயே இந்த சிறியளவிலான பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது...பயப்படும் படியாக் எதுவும் இல்லை என்றும் இலேசான நிலா நடுக்கம் என்றும் அறியப்படுகிறது...

அந்தமான் , நிக்கோபார் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது...

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட 8.9 அளவிலான பூமி அதிர்ச்சியின் தாக்கமே இங்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது.

No comments: