புலம்பெயர் தமிழரின் உழைப்பில் கனடாவில் உருவான A Gun & A Ring ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில்
உலகின் மிக முக்கியமான போட்டித் திரைப்பட விழாக்களுளொன்றான ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) கனடியத் தமிழர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A GUN & A RING.
112 நாடுகள், பிராந்தியங்களிலிருந்து போட்டிப் பிரிவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களிலிருந்து A GUN & A RING உட்பட 12 படங்கள் மட்டுமே Golden Goblet(தங்கக் கோப்பை) விருதுக்கான போட்டிக்குத் தேர்வாகியுள்ளன.
2013 ஜூன் 15-23 வரையில் சீனாவின் ஷாங்காய் நகரில் விழா நடைபெறுகின்றது.
இப்படத்தின் இயக்குனர் லெனின் சிவம் தான் ''1999'' என்ற திரைபடத்தை ஏற்கனவே எடுத்து பல சர்வதேச விருதுகளை பெற்று கொடுத்தார்
1999 திரைபடம் லண்டனில் திரையிடபட்ட பொழுது அதை பற்றிய விமர்சனம் எழுதி இருந்தேன் அதை பார்க்க விரும்பின் கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்
70 80 களின் காலம் பொற்காலம் என்று ஒரு சாராரும் ,மறுபக்கத்தில் வேதனையே மறு சாராரும் இருந்து விவாதிக்கும் நீயா நானா நிகழ்ச்சி பார்க்க கிடைத்தது.பங்கு பற்றிய இரு சாரரும் ஒரே கால கட்டத்த்தினர் அவரவர் கருத்துகளை அவர் அவர் கூறும் பொழுது இருசாராரும் உன்னிப்பாக ரசித்து அனுபவித்து அந்த காலத்துக்கு சென்று கொண்டிருந்தினர்.
நல்லதோ கெட்டதோ சந்தோசமோ வேதனையோ எப்படியோ அது பொற்காலம் என்று தண்டரோ போட்டு சொல்ல முடியாவிட்டாலும் என்னவென்று கூற முடியாத உணர்வு ஒன்று மனதை தாலட்டி அந்த காலத்தோடை அடிக்கடி ஒன்றிணைத்து வைத்து கொண்டிருப்பதால் பார்த்து கொண்டிருந்த எனக்கும் அந்த நிகழ்ச்சியோடு சங்கமித்தித்த்து ஆச்சரியமான விசயமில்லை தானே
அதில் விருந்தின பேச்சாளர் ஒருவராக வந்திருந்த கவிஞர் மகுடேஸ்வரன் கூறிய ஒரு கருத்து 70 80 களில் நடைபெற்ற சம்பவம் ஒவ்வொன்றும் மனதில் ஞாபகமாக அச்சாணியாக பதிந்து இருக்கிறது..மற்றய காலகட்டது நினைவுகள் ஞாபகம் இல்லாமால் இருப்பது மட்டுமின்றி....வேகமாக நகர்ந்த மாதிரி இருக்கிறது என்றார். அது என்னை பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருந்திய மாதிரி இருந்த்து..அந்த கால கட்ட நினைவுகளை இப்பொழுதும் சரியாக நினைவுட்ட முடிகிறது மற்ற கால கட்டத்தினிலும் பார்க்க..
காலனித்து வாதிகள் இந்திய உபகண்டத்துக்கு சீதனமாக கொடுத்து விட்டு போன இந்த கிரிக்கட் விளையாட்டில் அந்த காலம் முற்போக்கு பிற்போக்கு பேதமின்றி மிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இந்த விவாதத்தில் பங்கு பெற்றிய ஒரு ஒருவர் அந்த காலம் கிரிக்கட் வர்ணணை கேட்கும் விதம் பற்றி கூறி இருந்தார் . நண்பர்கள் சுற்றி இருக்க ஒரே ஒருவர் கேட்டு கொண்டு அந்த வர்ணணையை இக்காலத்தில் இருப்பது மாதிரி நேர்முக படபிடிப்பில் வரும் உணர்வை கொண்டு வருவார் என்று.
நாங்களும் இதே மாதிரி தான் சிறிய றேடியோவை வைத்து கிரிக்கட் கொமண்டிறி கேட்டது ஞாபகம் இந்தியாவில் அப்பொழுது பெரு நகரங்களான பம்பாய்,கல்கத்தா, சென்னை ,டெல்லி பெங்களூர்,கான்பூர் இடங்களில் டெஸ்ட் கிரிக்கட் நடக்கும். சென்னை தவிர மற்ற இடங்களில் நடக்கும் டெஸ்ட் வர்ணணைகளை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் 15 நிமிடத்துக்கு ஒரு முறை மாறி மாறி தான் கேட்க முடியும் .... கிரிக்கட் ஆர்வத்தால் எங்களுக்கு ஹிந்தி சொல்ல சொல்லுகள் கூட தெரிந்து கொள்ளுவோம் ..இப்படி அந்த கால கட்டத்து மனதில் சொறியும் நினைவுகளை இப்படி கனக்க சொல்லலாம் ....கீழே அந்த பொற் கால விவாத வீடியோ பார்த்து உங்களுக்கும் அப்படி ஒரு சொறியும் நினைவுகள் இருந்தால் சொல்லுங்கோ