வாசகர் வட்டம்

Friday, July 26, 2013

CCTV -யில் அகப்பட்ட ஸ்பெயின் ரயில் விபத்து-வீடியோ


ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சான்டியாகோ நகரில் நேற்று நடைபெற இருந்த கிறிஸ்தவ ஆலய விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்களில் ஏராளமானோர் வந்துள்ளனர். அதுபோன்று யாத்ரீகர்கள் வந்த ஒரு ரயில்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது. 8 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 5 ரயில்வே பணியாளர்களும், 218 பயணிகளும் இருந்துள்ளனர்.
நன்றி-one india tamil

No comments: