வாசகர் வட்டம்

Thursday, October 16, 2014

லண்டனில் விஜயகாந்தின் பேட்டி 2003 இல்-வீடியோ இந்த பேட்டியை பார்க்கும் பொழுது நல்ல தெளிவாகவும் கொஞ்சம் விவரமாகவும் தன்னடகத்துடனும் தானே பேசுகிறார் .. .

இடையிலை என்ன நடந்தது உந்த ஆளுக்கு ...சில வேளை .அரசியலுக்கு வந்த பிறகு தான் கொஞ்சம் லூசாயிட்டாரோ?

 2002 ஆண்டளவில் சென்னையில் இருந்து லண்டன் நான் வந்த பொழுது அந்த விமானத்தில் இவரும் பயணம் செய்திருந்தார் ஆனால் அவர் முதல் வகுப்பில் ..

மீனபாக்கம் விமானநிலையத்துக்குள் விமானம் வரை அவரை ராஜமரியாதையுடன் அழைத்து சென்றனர் அங்குள்ள அதிகாரிகள்

 லண்டன் விமானநிலையத்தின் குடிவரவு மேசைக்கு நாங்கள் போகும் வழியில் அவரும் அவரது செயலாளரும் எதிர்பக்கமாக அங்குள்ள அறிவுபலகைகள் பார்த்த படி பட்டணத்தில் தவறப்பட்ட குழந்தைகள் போன்று ஏமாலந்தி கொண்டு வந்திருந்தார்கள்..

நான் ஒரு அறிமுக சிரிப்பை செலுத்தி கூடியும் அவர் கண்டு கொள்ளவில்லை .அந்த அளவுக்கு எதையோ தவற விட்ட தனித்துவிடப்பட்ட நிலையில்  படபடப்புடன் இருந்தார்கள்

No comments: