வாசகர் வட்டம்

Sunday, June 07, 2015

'''தீபன்'' திரைபட நாயகன் சோபாசக்தியுடன் நேர்காணல் தொலைக்காட்சியில்-வீடியோஇந்த நேர்காணலில் சோபாசக்தி ஏன் இந்திய தமிழ் உச்சரிப்பில் இடைக்கிடை அதிகம் கதைக்கிறார்?

 மாஸ்...திரைபடத்தில் ஈழப்பேய் சரியாக தமிழ் கதைக்கவில்லை என்று கவலை படுகிறாக்கள் இதையும் ஒருக்கா கவனம் எடுத்து கேளுங்கோ..

 தீபன் திரைபடத்தில் சோபாசக்தி நன்றாக யதார்த்தமாக நடித்ததாக பல பத்திரிகைகள் பாராட்டியதாக இணையத்தில் படித்தேன்.இந்த பேட்டியில் சோபசக்தியின் அசைவுகள் பேச்சுக்கள் சரியான ஓவர் ஆக்டிங்கா கிடக்கு

 ...ரஜனியின் திரைபடத்தில் செய்யும் பாவனைகள் கூட யதார்த்தமாக இருக்கும்...சோபாசக்தி தீபன் நடித்தா பிறகு இப்படி ஆயிட்டரோ. அல்லது.வழமையாக விவாதம் செய்யும் பொழுது இப்படித்தானோ?.

.சோபாசக்தி அடிக்கடி ஏன் அண்ணாந்து முகட்டை பார்க்கிறார்?

 சோபாசக்தியின் இந்த பேட்டியில் அகதி பார்வை .இடதுசாரி பார்வை இலக்கிய பார்வை ...கேட்டு பாருங்கள் தீபன் திரைபடத்தை பற்றி பேசுவாங்கள் என்று பார்த்தால் பேட்டி காண்பவர் கோவை நந்தன் என்று நினைக்கிறன் அவர் கூட ஒரு அரசியல் இலக்கிய வாதி என்று நினைக்கிறன்...பேட்டி எடுக்க போய் பேட்டி கொடுக்க போய்  இரண்டு பேரும் முட்டு படுறதை பார்க்க ...என்னத்தை சொல்ல அய்யோ அய்யோ...


 உந்த இலக்கிய அரசியல் சந்திப்பு அப்பிடி இப்பிடி சந்திப்பிலை வெளிநாட்டில்  இலக்கிய விவாதங்கள் அரசியல் விவாதங்கள் இப்படித்தான் நம்மாக்கள் செய்வினம் போலை?

 30 வருசத்துக்கு முன்னே திண்ணையிலை மதிலை அங்கங்கை அரசியல் இலக்கிய விவாதம் செய்தவியளை பார்த்து பலது பத்து சொல்லி குறை சொல்லுவினம்....ஆனால் ..இவையளை பார்கக்க்கை...அவையள் எவ்வளவோ பராவியில்லை..


என்னத்தை சொல்ல ...சாதாரண பார்வையாளனாக,,,

1 comment:

putthan said...

சோபாசக்தியும் முதலாளித்துவ நாட்டிலிருந்துதான் மார்க்சிசம் கதைக்க வேண்டிய நிலை .....ரஸ்யாவிலோ,சீனாவிலோ இருந்து கம்னியூசம் கதைக்க முடியாமல் போய்விட்டது