வாசகர் வட்டம்

Saturday, June 01, 2019

எரிக்கப்பட்ட அறிவுக் கோயில் ,38 வருடங்கள் இன்றுடன்..அணையா நினைவுகள் -வீடியோ

எரிக்கப்பட முன் இருந்த நூலக சூழலில் ஒரு மாலை நேரத்தை நினைத்து நினைத்து பார்க்கிறேன் வெறும் மங்கலாகவே தெரிகிறது

 .அப்படியிருந்தும் அதனூடாக ஊன்றி பார்த்தால் சுப்பிரமணிய பூங்காவில் நேரம் சொல்லும் றேடியோ 

அதன் பின் வரும் மெதுவாக உடலை வருடும் சினிமா பாடல்

 சைக்கிளில் மடித்து சுருட்டிய கொப்பியுடன் அவசரமா டியூசனுக்கு வேண்டா வெறுப்பாக செல்லும் பொடியள்

 மத்திய கல்லூரி மைதானத்தில் பயிற்சி எடுக்கும் பொடியள்

 மற்றும் விளையாடும் மாணவர்கள் மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை விடுதியின் முன்பாக உள்ள மதிலிற்க்கு பாரமாக இருந்து கொண்டு அரட்டை அடிக்கும் அக்கல்லூரி உயர்தர மாணவ பிரபலங்கள் 

 முனியப்பர் கோவிலுக்கும் வரும் பெட்டையள்களின் கண் குடுப்பை தரிசிக்க அவசரமாக செல்லும் பொடியள்
 நூலக வாசலில் வரவேற்பாளனோடு அரட்டை அடித்து கொண்டு இருக்கும் சில பெட்டையள் 
 விளங்காத போரடிக்கும் மு.வரதராசரின் புத்தகத்தை நூலகத்தில் இரவல் எடுத்து கொண்டு அவசரமாக சைக்கிள் தரிப்பிடத்துக்கு செல்லும் நண்பர்கள் 
 சற்று மேலாக சென்றால் படிகளில் பயந்து பயந்து பேசிக்கொண்டு காதலிக்கும் ஜோடிகள் 
 ஒரு பக்கத்தில் தரப்படுத்தலுக்கு எதிரான அஸ்திரத்தை தேடிக்கொண்டு இருக்கும் மாணவர்கள் ..அப்படியொரு மயான அமைதி இருக்கும் படிக்கும் மற்றும் உதவி குறிப்புகள் இருக்கும் பகுதியிலை 

ஒரு குண்டூசி விழுந்தாலும் பெரிய ஒலியுடன் கேட்கும் .இங்கு தானோ புத்தர் இங்கு தான ஞானம் பெற்றாரோ என்று தோன்றும் எதிரே கேட்போர் கூடம் 
..எதாவது கருத்தரங்கு .கூட்டம் போன்ற நாட்களில் திறந்து இருக்கும்

 கீழே புத்தகம் இரவல் எடுக்கும் பகுதி எதிர் பக்கம் செய்தி பத்திரிகைகள் சஞ்சிகைகள், அப்படி வந்த சஞ்சிகைகள் இப்ப காணமால் போயிட்டன என
 நினைக்கிறன் .

.பொம்மை பிலிமாலாயா ,readers digest,அதே சாயலில் வரும் தமிழ் சஞ்சிகை .மஞ்சரி .சிங்கப்பூரில் இருந்து வரும் உயர் தர தாளில் அச்சடித்து வரும் சினிமா சஞ்சிகை (பெயர் மறந்து விட்டது),கணையாழி, மல்லிகை ,சிரித்திரன் ,கலகலப்பு ,இந்திய குமுதம் பாணியில் வெளியில் வந்த இலங்கை சஞ்சிகை மாணிக்கம் ,அம்புலி மாமா,சந்தாமாமா ,குஷ்வந்த் சிங்கின் illustrated weekly of india,லண்டனில் இருந்து வந்த லண்டன் முரசு என்ற சஞ்சிகை ( ஜநாவுக்கு நுழைந்த வைகுந்தவாசனின் தம்பி ஆசிரியாக கொண்டது) உத்தியோகபூர்வமாக வைக்காவிடின் சிவாஜி ரசிகர்களால் வெளியிடப்படும் சிம்ம குரல் என்ற பத்திரிகையும் எம்ஜிஆர் ரசிகர்களால் வெளியிடப்படும் பத்திரிகையும் சிலவேளை இருக்கும் 

 80 களில் இடம் பெயர்ந்த பல்கலைகழக மாணவர்களால் 9 பேர் சாகுவரை உண்ணாவிரதம் இருந்து கடத்தபட்டு ஒரு நாடகம் யாழ் பல்கலைகழத்தில் நடந்த்து யாவரும் அறிந்த்தே

 அதன் பின்னர் யாழ் மேல் தட்டு வர்க்கத்தினர் நீலன் திருச்செல்வத்தின் அனுசரனையுடன் அந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய மாணவ நிர்வாகத்தின் பிரநிதகளை ஜேஆருடன் சந்திக்க ஒழுங்கு செய்தனர்

 இடம் பெயர்ந்த பல்கலைகழக மாணவர்கள் அப்பொழுது வைத்த கோரிக்கை சகல பீடங்களும் வடக்கு கிழக்கில் உருவாக்கி அங்கு சகல தமிழ மாணவர்களையும் அங்கு கல்வி கற்க ஒழுங்கு செய்ய வேண்டும் என்று அந்த சந்திப்பில் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் மாணவர்களுடன் கலந்து கொண்டார் ..

.அப்படி உரையாடல் நடந்து கொண்டிருக்கு சந்தர்ப்பத்தில் சட்டபிரிவு பீடம் அமைவது பற்றி வரும் பொழுது அப்போதைய பிரதி சட்ட அமைச்சராகவும் இருந்த ரனில் விக்கிரமசிங்கா சட்டபீடம் எல்லாம் உடனடியாக வைக்க இயலாது அதுக்கு உரிய சட்ட புத்தகம் அடங்கிய நூலகம் எல்லாம் அமைக்கோணும் என்று கூறினார் 

 அப்பொழுது எம்பெருமான் அமிர்தலிங்கம் என்ன கூறி சலசலபை உருவாக்கினார் தெரியுமா 
 ஜயோ என தலையில் கையில் அடிச்சப்படி எனன அருமையான சட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் இருந்த்து அதை எரிச்சு போட்டியளே என்று ?

No comments: