வாசகர் வட்டம்

Wednesday, June 05, 2019

தலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ

சாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் சமீபத்தில் நடந்த இளையராஜாவின் நிகழ்ச்சியொன்றில் மேடையில் தண்ணி கேட்டவர்களுக்கு தண்ணி கொடுக்க வந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த சம்பவம் பலர் அவரை கேள்விக்குள்ளாகியிருக்கறார்கள்

..அவர் இசை மேதையாக இருக்கலாம் ..அவர் சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்து ரசித்தது..அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்

 ஞான செருக்கு ,வித்யா கர்வம் இருக்கும் மேதைகளுக்கு என்று பலர் சப்பை கட்டுகிறார்கள்

 இப்படித்தான் டிஎம் செளந்திரராஜனக்கும் தான் பெரிய பாட்டுக்காரன் என்று  வித்யா கர்வமாம்

இலங்கையில் 80 களில் டிம் செளந்திரராஜன் மேடையில் இப்படி நடந்த கொள்ள இலங்கை தமிழ் ரசிகர்கள் முறியடித்து இருந்தனர்

டிஎம்ஸ் க்கு அவரது திறமையில் அபார கர்வமாம் அந்த காலம் . அந்த வித்யா கர்வம் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டியது தான்

. இலங்கையில் சுகதாச ஸ்டேடியத்தில் வந்து ஒரு நிகழ்ச்சி செய்யும் பொழுது அதற்கு கே.எஸ் ராஜா அறிவிப்பாளராக இருந்தார்.

யாராப்பா ஏனப்பா எனக்கு ஏன் அறிவிப்பாளர் நான் சிவாஜிக்கு குரல் கொடுத்தனான் எம்ஜிஆருக்கு குரல் கொடுத்தனான் என்று ஏளனமாக சொல்ல.

.அதை கேட்டு ராஜா மூத்த கலைஞரை மதித்து வழி விட ..

ஆனால் அங்கு கூடி இருந்த ரசிகர்கள் ராஜா, ராஜா என்று கோரஸ் இட மீண்டும் ராஜா வந்து தான் நிகழச்சியை இலகுவாக ஆரம்பிக்க கூடியதாக இருந்த்து

No comments: