வாசகர் வட்டம்

Thursday, July 16, 2009

சுரதா யாழ்வாணன்-கனேடிய இலக்கிய தோட்ட விருதுகள்

காலச்சுவடு அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படும் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2009ஆம் ஆண்டில் திரு. சுரதா யாழ்வாணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுரதா யாழ்வாணன் தமிழ் கணினித் துறைக்குப் பங்களித்து வருபவர்களுள் முக்கியமான ஒருவராவார். யாழ்ப்பாணத்தில் 1961இல் பிறந்த சுரதா, 1984 முதல் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இளமைக் கல்வியை யாழிலும் பின்னர் புலம்பெயர்ந்து ஜெர்மனியில் தகவல் தொழில்நுட்ப மின்னணுவியல் (Information electronics) துறையில் மேற்படிப்பு பெற்றுத் தற்பொழுது அத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழில் தட்டச்சுசெய்ய விரும்புவோர் வசதிக்காகப் பல்வேறு வகையான நிரல்களை சுரதா எழுதியுள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம் தினகரன் போன்ற பல்வேறு வகையான எழுத்துருக்களை ஒருங்குறிக்கு (UNICODE) மாற்றும் பொங்குதமிழ் குறியீட்டு மாற்றி ஒருங்குறியில் தகவல் பறிமாற மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் (Romanized) முறையில் தமிழ் எழுத விரும்புவோர் தமிழைக் கணினியில் பாவிப்பதிலிருக்கும் தயக்கத்தை இது பெரிதும் குறைக்கிறது. சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிகோட் குறிமுறையில் கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல், பாமினி, அமுதம் உள்ளிட்ட பல தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயலியை இலவசமாக இணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். தமக்குப் பரிச்சயமான உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தி யுனிகோடில் எழுத உதவும் இந்த நிரலி தமிழில் யுனிகோட் புழக்கத்தைப் பரவலாக்கப் பேருதவியாக இருந்தது.

இவை தவிர யுனிகோடில் இல்லாத பழைய தமிழ் மீயுரை (hypertext) பக்கங்களை உலகத் தரமான யுனிகோடிற்கு மாற்ற உதவும் மென்கலன், தமிழிலேயே உள்ளிட்டு தேடக்கூடிய யாழ்தேவி போன்ற பல பயனுள்ள பங்களிப்புகளையும் சுரதா தந்திருக்கிறார். சமீபத்தில் பார்வையில்லாதவர்களும் தமிழில் கணினியைப் பயன்படுத்த உதவும் தமிழ் படிப்பி (Text to speech) நிரலியையும் சுரதா வடிவாக்கி வருகிறார்.


நன்றி- காலச்சுவடு

3 comments:

கானா பிரபா said...

சின்னக்குட்டியர்

சுரதாவை பார்ப்பம் எண்டு ஓடோடி வந்த என்னை ஏமாத்தலாமா :0

அவருக்கு என் வாழ்த்துக்கள்.

என்னை kanapraba@gmail.com என்ற தனிமடலில் தொடர்பு கொள்ள முடியுமா?

சின்னக்குட்டி said...

வணக்கம் பிரபா ..வாங்கோ ...

பதில் போட்டுள்ளேன்

rahini said...

என் வாழ்த்துக்கள் சுரதா.