வாசகர் வட்டம்

Thursday, July 16, 2009

புலம் பெயர் தமிழ் இளைஞர்களும் -GANG கலாச்சாரமும்

கனடா, ரொறன்ரோவில் கிறிஸ்ரியன் தனபாலன் (வயது 22 என்ற தமிழ் இளைஞன் கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ரொறன்ரோ நகரில் கிளமோர்கன் பார்க்கில் கடந்த சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் இறந்து விட்டார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஈளைஞன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு ரொறன்ரோவிலுள்ள தமிழ் சமூகத்திடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனபாலன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அங்கு 23 பேரடங்கிய மற்றொரு குழுவினரும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதி பொலிஸ் சார்ஜன்ட் சாவாஸ்கிரியாகூ கூறியுள்ளார்.

இந்த இரு குழுவினருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மற்றைய குழுவினர் வாகனங்களில் ஏறிச் சென்றுவிட்ட போதும் பின்னர் அவர்கள் திரும்பி வந்ததாகவும் நள்ளிரவில் இரு குழுக்களும் சண்டையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபாலும் நண்பர்களும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இரு குழுவினரும் தமிழர்கள்

2 comments:

ILA said...

மீண்டும் வந்ததற்கு நன்றி, என்னாச்சு பழைய பதிவுகளுக்கு?

சின்னக்குட்டி said...

வணக்கம் ILA ..வாங்கோ...நன்றிகள்

கடந்த மூன்று வருடங்களாக இங்கே ஏராளமான ஆணிகளை அடித்துவிட்டேன். இப்போது திரும்பிப் பார்த்தால் தேவையான ஆணிகளை விட தேவையில்லாத ஆணிகளே அதிகம் :-(

பிரபல வலை பதிவாளர் லக்கிலுக் கூறியது.