வாசகர் வட்டம்

Thursday, July 29, 2010

சுரதா யாழ்வாணன் விருது பெற்ற போது-வீடியோ



சுரதா தமிழ் கணனி சம்பந்தமாக புரட்சி செய்தவர்களில் ஒருவர் என அனேகருக்கும் தெரியும் .அவருக்கு கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தினர் ஒரு விருதை வழங்கி இருந்தனர் ,விருது வழங்கிய வைபவத்தின் வீடியோ துண்டத்தை தற்பொழுது தான் எனக்கு பார்க்க கிடைத்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்..

5 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர்களில் பலர் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஏன்? இங்கு வந்திருப்பவர்களால் தமிழைப் புரிந்து கொள்ள முடியாதா? இவ்விழாவை முழுத் தமிழ் விழாவாக நடத்தத் தடையாக உள்ளது எது?
சுரதா அவர்கள் தமிழ்க் கணனிக்குதான் சேவை செய்தவர். அவரைத் தமிழால் பாராட்டக் கூடாதா?

Anonymous said...

அண்ணன் சுரதா வாழ்க

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகன் அண்ணை வாங்கோ ..எனக்கும் உங்களை மாதிரிதான் எனக்கும் பட்டது ..ஆங்கிலத்தில் வித்தக காட்டுகிறார்கள் என்று.. இந்த வீடியோ துண்டம் 2008 க்கான விருது ..2009க்கான விருது வைபவம் எனக்கு பார்க்க கிடைத்தது ..அதில் எல்லாரும் தமில் இளக்கிய தோட்டம் என்று விட்டு இங்கிரூஸ் இலை கக்கிறார்கள்..அதில் ஒரு வெள்ளை இனத்தவர் பேசுகிறார் ..அவர் மட்டும் அழகான தமிழில் பேசுகிறார்

HK Arun said...

இணையத்தில் நன்கு எல்லோருக்கும் பரிட்சையமான சுரதா யாழ்வாணனை இக்காணொளியூடாக பார்க்கக்கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி!

காணொளி இணைப்பிற்கும் மிக்க நன்றி சின்னக்குட்டி

koomaganblogspot.fr said...

ஒ.............. எல்லாரும் றோயல் பமிலியள் கண்டியளோ சின்னக்குட்டியர். சுட்டுபோட்டாலும் தமிழ் வருதில்லை. இவையள் தான் தமிழும் தேசியமும் வழக்கினம். ஒரு தமிழன் சக தமிழனிடம் வேற்று மொழியில் கதைக்கிறான் சுத்தம் ................