வாசகர் வட்டம்

Sunday, February 06, 2011

70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்இவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெயர் பொன்னம்பலம் என்று நினைக்கிறேன் . இவர் படிக்கும் பொழுது எப்பொழுதும் use என்ற ராகத்துடன் முடிப்பார் ,பொதுவாக இவர் முன் பெண் மாணவிகள் சிரித்தால் இவருக்கு கெட்ட கோபம் வரும். ஏனோ தானோ என்று படிக்கின்ற பெயரில் பின் வரிசையில் இருந்து சிரித்து கும்மாளமடித்த காரணத்தால் என்னை வெளியே துரத்தி இருந்தார் .30 வருடங்கள் சென்றாலும் இந்த சம்பவம் ஞாபகம்இவரும் வடமராட்சி தனியார் யூட்டரிகளின் பிரபலமான ஆசிரியர் பெயர் தம்பிராசா இவரிடம் உயிரியல் பாடம் படித்திருக்கிறேன் .இவர் படிப்புக்கும் பொழுது தமிழை ஒருவிதமான உச்சரிப்பில் உச்சரிப்பார் அதுவும் உயிரியல் பாடத்தில் வாழ்வில் முக்கியமான விடயம் பற்றி படிக்கும் போது நானும் எனது பக்கத்து மாணவனும் சிரிப்பு அடக்க முடியாமால் சிரித்து கொண்டிருந்தமையால் எங்களை வெளியேற்றியது இன்று ஞாபகம்இவரும் யாழ் வடமராட்சி பகுதியிலுள்ள தனியார் டியூட்டரிகளில் பிரபலமான கணித ஆசிரியர் இவரை நல்லையா மாஸ்ரர் என்று அழைப்பர்.அந்த காலங்களில் அரிதாக அதி வேகம் கூடிய குதிரை சக்தியுடைய மோட்ட சைக்கிள் வைத்திருந்தவர்களில் ஒருவர்,இவர் என்னை வெளியேற்றவில்லை ஆனால் என்னை வெளியேற்ற பட சூழ்நிலையை செய்யிறாய் நான் உன்னை வெளியேற்ற விரும்பவில்லை என்று கூறியது இன்று ஞாபகம் வருகிறது எனது பின்வரிசை கும்மாளத்தை நட்புத்துவத்துடன் ஏற்று கொண்டவர் ,,,இவர் மாணவர்களுடன் மிகவும் சிநேகபூர்வமாக இருப்பார்


14 comments:

jeyaa59 said...

நானும் வேலாயுதம் மாஸ்டர் RP மாஸ்டர் ஆகியோரிடம் படித்தேன்
அது ஒரு நிலாக்காலம் ம்ம்

jeyaa59 said...
This comment has been removed by a blog administrator.
சின்னக்குட்டி said...

வணக்கம் ஜெயா 59 ,வாங்க ..அது ஒரு நிலாக்காலத்தை என்னுடன் பகிர்ந்து இணைந்து கொண்டமைக்கு நன்றி

Sennakkalvalasu T.Selvaraju said...

நானெல்லாம் வெளியேற்றப் படவில்லை.அடிதான் திண்னிருக்கேன்.சில சமயங்களில் நியாயமன அடி.பெரும்பாலும் சம்பந்தமே இல்லாத அடி.அது ஏன் என்றே தெரியவில்லை இன்று வரை.நியாயமான அடிகொடுத்த ஆசிரியர் நினைவில் இருக்கிறார்.சொல்லிக்கொடுத்த பாடமும் நினைவில் இருக்கிறது.சம்பந்தமே இல்லாமல் அடிக்கடி அடி கொடுத்த வாத்தியான் ஆம் வாத்தியான் தான்.வழியில் எப்பவாவது பார்ப்பேன் ஒரு முறை முறைத்துப்பார்த்துவிட்டுச்செல்வேன்.ஒரு முறை அவராக வந்து நீ என் மாணவன் தானே என்று கேட்க.நினைவில் இல்லையே என்றேன்.
நியாயமாக அடித்த ஆசிரியர் என் வீட்டுக்கு அருகிலிருக்கிறார்.நான் வெறான்டாவில் அமர்ந்திருக்கும் பொழுது அவர் வீதியில் வந்தால் இன்றும் எழுந்து கொள்வேன் (என் வயது 62)வணக்கம் சொல்வேன் .பின் என் கண்னத்தைத் நானே தடவுவேன்.அவர் சிரித்த்க்கொண்டே இன்னும் அதை விடமாண்டீங்க.என்பார்.
கன்னத்தைத் தடவுவது பற்றி அவரிடம் சொன்னேன்.நீங்க வீட்டுப்பாடம் செய்து வரவில்லை என்று அடித்தது இன்னும் வலிக்கிறது சார்.அதுதான் என்பேன்.இன்றுவரை வணக்கம் சொல்லிவிட்டு கன்னத்தை தடவிக்கொண்டுதான் இருக்கிறேன்.அவரும் பதில் வணக்கம் சொல்லி சிரித்துக்கொள்வார்.எத்தனையோ ஆசிரிகளிடம் படித்தாலும் எல்லோருமா மனதில் நிற்கிறார்கள்.நன்றாக சொல்லிக்கொடுத்தவர்கள் மட்டுமே மனதில் நிற்கிறார்கள்.

மீராபாரதி said...

நன்றி நல்லையா மாஸ்டரின் படத்திற்கு...
எனது பதிவிலும் அவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கின்றேன்.
உங்கள் அனுமதியுடன் அவரின் படத்தை நான் பயன்டுத்தலாம் தானே....
நல்லையா மாஸ்டரிடம் கணிதம் கற்றேன்… அதிகம் கணக்குகள் கற்பிக்க மாட்டார்… ஆனால் கற்பிக்கும் நாளைந்து கணக்குகளும் எங்களுக்கு விளங்கிவிட்டால் சித்தியடைவதற்கு போதுமானது…. ஒரு கையில் சிகரட்டுடன் அழகாக கற்பிப்பார்… நான் நல்ல பரிட்சை முடிவுகள் எடுப்பேன் என எதிர்பார்த்தார்… ஆனால் அவரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியவில்லை…. என் மூளைக்கு சென்றது அவ்வளவு தான் …

சின்னக்குட்டி said...

//உங்கள் அனுமதியுடன் அவரின் படத்தை நான் பயன்டுத்தலாம் தானே//

மீராபாரதி ..தாராளமாக பயன்படுத்துங்கள் ..என்னிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்று நினைக்கிறேன் ..ஏனென்றால் நானும் இணையத்தில் சுட்டது தானே

Radha Kadams said...

It's great to recall those memories and salute these legends ��

Radha Kadams said...
This comment has been removed by the author.
Jeyaruby Ragavan said...

Thanks for sharing with what ever the comments. But I am very thankful to Nalliah master. I was one of the sincere student. Ponnampala maters daughter is our batch mate and Thambirajah master was my brothers favorite zoology teacher. Thankful to all the others taught us too!

Piratheepan Thangarajah said...

Nallayar and Thambirajar both were great A/L gurus once. Created many scholars in Jaffna.We all are grateful for them always

Sivarubhini Kanagasabai said...

நினைவு கூர வைத்த புகைப்படங்களும் குறிப்புகளும்
ஒரு சில காலங்கள் மட்டுமே கற்றாலும்
பல வருடங்கள் பின்னும் மறக்க முடியாத
நினைவுகள்

nadarajah kandiah said...

KP master,Velautham master,Nalliah master
மறக்க முடியுமா இவர்களை?

Ratnam Ganesh said...

ஏன் ரியூட்டரியில் படிக்கவேணும்.பாடசாலை படிப்பு தரம் குறைந்து விட்ட்தா? யாழ்ப்பாணத்தில் இது ஒரு பணம் சேர்க்கும் ஸ்த்தாபனம் ஆகிவிட்ட்தா?​

thaya said...

Thank you for sharing the photos. I know all three but never studied from them. During early eighties, they were teaching at Uduppiddy American Mission College.

I think Thambirajah master was teaching at Hartley.

RP master's daughter who was very pretty those days and travel with her father on back of his scooter. Many boys daily waiting for her arrival at the entrance.

Their photos brought the great memories of those old god days back.