வாசகர் வட்டம்

Wednesday, March 29, 2017

ரஜனிகாந்தும் யாகாவா முனிவரும்-வீடியோ

நான் தான் கடவுள்  எனக்கு வயது 5000  என்று 90 களில் தமிழ் நாட்டில் சொல்லிக்கொண்டு திரிந்த யாகாவா முனிவரை  மறந்து கொண்டிருக்க மாட்டீர்கள் .. இவரின் சட்டை பையில் எப்பொழுதும் உள்ளூர் சிகரட்டு பைக்கட் இருந்து கொண்டிருக்கும் ..இவர் சொல்லும் எதிர்வு கூறல்கள்  நடந்தும் இருக்கின்றன. இவர் ஒரு சித்தர் என்று கூறி பல அறிஞர்கள்  ஆன்மிவியாளர்கள்  இவரிடம்செ ன்று  கலந்து உரையாடியதுமுண்டு. அப்போதைய பிரபல சன் டிவியும்  இவரை பேட்டி கண்டும்  பிரபலபடுத்தியது

அவர் சொன்ன பல விசயங்களில் ரஜனி காந்த் பற்றியதும் உண்டு . ரஜனி காந்தின் பின் ஒரு ஒளி வட்டம் ஒன்று தெரிகிறது charisma இருக்கு .எதிர்காலத்தில் இந்த நாட்டு அதிபதியாக வருவார்  மற்றும் இலங்கை பாகிஸ்தான் சீனா நாட்டு பிரச்சனைகளையும் தீர்ப்பார் என்றும்


அதன் பின்  ரஜனி காந்த் அந்த யாகாவா முனிவரிடம் சென்று நீங்கள் தான் என் கடவுள் என்று சொல்லி ஆசி பெற்றதாகவும் அந்த நேரம் செய்திகள் வந்தன.

ரஜனி காந்த்  90 களில் இலங்கை போர் உக்கிரம் பெற்ற காலங்களில் தனது நண்பர்களிடம் கூறியதாக கிசுகிசு பேசப்பட்டது , ரஜனி காந்த்  தன்னிடம் உள்ள அந்த கவர்ச்சி சக்தியை வைத்து இலங்கை பிரச்சனையை  என்னால் தீர்க்க முடியும் ...ஆனால் ஒரு இயல்பான போக்கு எதிராக  எனது சக்தியை பிரயோகிக்க விரும்பவில்லை என்று கூறியதாகவும்

யாகவா முனிவரும்  சிவசங்கர் பாபா  என்ற நடன கலைஞரும் தான் தான் கடவுள் என்று  தொலைகாட்சி  விவாதத்தில்  அடிப்பட சம்பவங்களும் நடந்திருக்கின்றன

கீழே  பிரபல அறிவிப்பாளர்  ரவி பெர்னாட்  யாகாவா முனிவரை பேட்டி கண்ட வீடியோவை பார்க்காலாம்யாகாவா முனிவர் மாதிரி த்த்துவங்களயும் நடை உடை பாவனையையும் வைத்து நடிகர் விவேக் திரைபடத்தில் கலாய்த்ததை கீழே உள்ள வீடியோவில் மற்றும் தான் தான் கடவுள் என்று டிவி விதவாத்த்தில் யாகாவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் அடிப்பட்டதை கலாய்க்கும் காட்சிகளையும் காணலாம் யாகாவா முனிவரின் 55 வது பிறந்தாளில் பிரபலங்கள் பங்கு பற்றிய வீடியோ

No comments: