வாசகர் வட்டம்

Wednesday, March 01, 2017

,'''சவுக்கு சங்கர்''- வலைபதிவர்(Blogger)....திமுக,,அதிமுக இரண்டு பேருக்குமே சிம்ம சொப்பனமாக இருந்தவர்-வீடியோ


சவுக்கு சங்கரின் இணையதளத்தை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்
தமிழ்நாட்டில் 2008ல் நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கைதான சங்கர் என்பவர் நடத்தும் இணையத்தளமாகும். 2008ல் தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதிக்கும் இலஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் உரையை ஏப்ரல் 14, 2008ல் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ் வெளியிட்டது.

அந்த உரையாடலில் திரிபாதி உபாத்யாவிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கணக்கு விபரங்களை வருமானவரித் துறையிடமிருந்து வாங்குமாறு கூறியதாக அந்த செய்தி அறிவித்தது. இப்பிரச்சினையில் தொலைபேசி உரையாடலை செய்தியாளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த சங்கர் திசம்பர் 2008ல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

1 comment:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

வலைப்பூப் பதிவர்களிடையே
பெரும் மாற்றம் - அது
சவுக்கு சங்கரின்
இணையத் தளத்தின் திருப்பமே!