வாசகர் வட்டம்

Tuesday, October 31, 2017

இப்படி மேடையில் H ,ராஜா மொழி பெயர்த்தால் -வீடியோ

Saturday, October 28, 2017

யாழில் உம்மாண்டி யின் வருகை ..இன்றும் நாளையும்-வீடியோ

28/10/2017, 29/10/2017 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் ராஜா 2 திரையரங்கில் வெளியிடப்பட இருக்கின்றது. சனிக்கிழமை (28.10.2017) பிற்பகல் 3 மணிக்கு ஒரு காட்சியும் ஞாயிற்றுக் கிழமை (29.10.2017) பிற்பகல் 2:30 , 4:30, 6:30 காட்சிகளும் திரையிடப்படுகின்றது.

Sunday, October 22, 2017

கமலஹாசன்-நான் மட்டும் தோற்று போகலாம் இன்னொரு வீரன் வருவான்-வீடியோ

Saturday, October 21, 2017

மெய்சிலிர்க்க வைக்கும் ROCK STAR ரமணியம்மாள்-வீடியோ

Wednesday, October 18, 2017

1971 இல் இலங்கையில் நடந்த SO CALL ''' சே குவேரா'' புரட்சியின் பொழுது-வீடியோ

Tuesday, October 17, 2017

இலங்கையில் படமாக்கப்பட்ட சர்வதேச திரைபடங்களின் காட்சிகள் -வீடியோ

Tuesday, October 10, 2017

எம்ஜிஆரும் சிவாஜியும் கலந்து கொண்ட ஜல்லிகட்டு திரைபட விழா -வீடியோ

Wednesday, October 04, 2017

Tuesday, August 29, 2017

EPS, OPS Vs TTV ஆட்களை பஞ்சாயத்து செய்யும்,,, சொல்வதெல்லாம் உண்மை-வீடியோ

Tuesday, August 15, 2017

இலங்கை வானொலி அந்த கால நினைவுகள் -யாழ் சுதாகர்-வீடியோ

Sunday, August 13, 2017

இணையத்தை கலக்கும் சராஹா.... நல்லதா? கெட்டதா-வீடியோ

Saturday, August 12, 2017

K.S ராஜா நேர்முகம் செய்த வைரமுத்துவின் பேட்டி 1986 அளவில்-வீடியோ

Monday, July 10, 2017

BIG BOSS யின் மர்மத்தை வெளிபடுத்தும் தமிழ் இளைஞன்-வீடியோ

Wednesday, June 21, 2017

வாடி என் கறுத்த புள்ளே....இரண்டு நாளா உறக்கமில்லே....-வீடியோ

98 வயதிலும் யோகா பயிற்சியில் அசத்தும் நானம்மாள் பாட்டி -வீடியோ

Saturday, June 17, 2017

லண்டன் அடுக்கு மாடி தீ விபத்து-இங்கு மக்கள் புரட்சி வரணும்..F..K THE MEDIA..F..K THE MAINSTREAM .-வீடியோ

Wednesday, June 14, 2017

மாப்பிளை இவர் தான்.. ஆனால் இவர் போட்டிருக்கிற ட்றெஸ் என்னிது -ரஜனி -வீடியோ

கூவத்தூரில் அதிமுக எம் எல் ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விபரம் பற்றி மதுரை அதிமுக எம் எல் ஏ கூறிய விடயத்தை இரகசிய கமரா கொண்டு times now டிவி எடுத்திருந்து நேற்று முன் தினம் ஒலிபரப்பாக்கி பரபரபாக்கியது அதை கீழே பார்க்கவும்

  பின்னர் அதிமுக எம் எல் ஏ சரவணன் டிவியில் உள்ளது நான் தான் குரல் என்னுடையதில்லை என்று விளக்கமளித்தார் அ.தி.மு.க. இரு அணியாக பிரிந்தபோது சசிகலா அணியில் இருந்து விலகி கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன்.

 ஆங்கில தொலைக்காட்சியான “டைம்ஸ் நவ்”வில் சரவணன் எம்.எல்.ஏ. பேசுவதுபோன்ற ரகசிய வீடியோ நேற்று ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் சரவணன் எம்.எல்.ஏ. கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நடந்த பணப்பேரங்கள் குறித்து பேசுவதுபோல காட்சிகள் இருந்தன. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.6 கோடி வரை தர முன்வந்ததாகவும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.10 கோடி வரை கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுவதுபோன்று அந்த காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அவர் தெரிவித்ததாக வெளியான தகவல்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்த ரகசிய வீடியோ வெளியானது குறித்து சரவணன் எம்.எல்.ஏ. இன்று கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசி நான். அவரது மறைவுக்கு பிறகு கட்சியில் சில மாற்றங்கள் ஏற்பட்டபோது ஆட்சிக்கு எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அப்போது நான் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் எந்த காரணமும் சொல்லாமல் கூவத்தூர் விடுதிக்கு அழைத்து சென்றார்கள்.

அங்கு சென்றபின்னர் தான் பல வி‌ஷயங்கள் எனக்கு தெரியவந்தது. அப்போது எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் தொகுதி மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்துமே நீங்கள் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான பன்னீர் செல்வத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறினர்.

அந்த அடிப்படையில் கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்து கொண்டேன். தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன்.

இந்த சூழ்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவை “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள எந்த கருத்தும் என்னுடையதல்ல. எனது குரலைபோல “டப்பிங்” செய்து வெளியிட்டுள்ளனர். கூவத்தூரில் தங்கி இருந்தபோது நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாரும் எனக்கு பணம் தருவதாக கூறவும் இல்லை.

கடந்த சில வாரங்களாகவே என் மீது தவறான தகவல்களை பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

நான் எப்போதுமே பன்னீர்செல்வத்துடன்தான் இருப்பேன். இல்லாவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன். என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்ட இந்த ரகசிய வீடியோ முற்றிலும் போலியானது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் பரபரப்பில் சிக்கி உள்ள சரவணன் எம்.எல்.ஏ. இன்று காலை விமானம் மூலம் சென்னை சென்றார். அங்கு ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து இதுதொடர்பாக விளக்கம் அளிப்பார் என்று தெரிய வந்துள்ளது.


நன்றி -மாலை முரசு-http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/13135952/1090576/Saravanan-mla-says-private-TV-released-fake-video.vpf

Friday, May 26, 2017

கமலின் BIG BOSS போன்ற லண்டனில் நடந்த big brother நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா செட்டி வென்ற பொழுது-வீடியோ

சர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சியும், ஹிந்தித் தொலைக்காட்சிகளில் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சிதான்தான் ‘பிக் பாஸ்’. தற்பொழுது விஜய் தொலைகாட்சி பிரமாண்டமாக தயாரித்து வருகிறது இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொத்து வழங்கப்போகிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதை கமல்ஹாசன் முதன் முறையாக நிகழ்த்த இருக்கிறார்.

 ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பதினைந்து பிரபலங்கள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பில்லாமல், 100 நாட்கள் இணைந்து வசிக்கப்போகின்றனர். அதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். அவர்களுக்கு மொபைல் போன், லாண்ட் லைன் போன்ற எந்த தொலைத் தொடர்பும் வழங்கப்படமாட்டாது. அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த உபகரணங்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும். முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனிடம் ‘பிக் பாஸ்’ பற்றிக் கேட்ட போது, “விஜய் தொலைக்காட்சி என்னை முதலில் அணுகியபோது நான் சிரித்தேன்.

என்னைத் தவிற வேறு யார் சரியாக இருக்க முடியும் என்று. என் வாழ்க்கையில் பொது விஷயங்களோ அல்லது தனிப்பட்ட விஷயமோ, எனது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் வந்துள்ளது. தற்பொழுது எதிர்மறையாக இருக்கப்போகிறது. மக்களுடன் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பவர்களை நான் கண்காணிக்கவேண்டும் இந்த பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போகிறேன்.

 இந்த வீட்டில் நூறு நாட்கள் வரை வசித்து வெற்றியை தக்க வைக்கப் போகிறார்களா என்பதை பார்க்கப் போகிறேன்,” என்று ஆர்வமாகக் கூறினார். எண்டமோல் நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்க பத்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பியது.

மேலும் இந்த நிகழ்ச்சி பெங்காலி மற்றும் கன்னட மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் ‘சவால்கள்’ தவிர்த்து, ஒவ்வொரு போட்டியாளரும் தன்னுடன் இருக்கும் சக போட்டியாளரை வாரம் ஒரு முறை நிகழ்ச்சியில் இருந்து நீக்கவேண்டும். விஜய் தொலைக்காட்சியின் பொது மேலாளர் கிருஷ்ணன்குட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறுகையில், “இந்த புது விதமான நிகழ்ச்சியை நேயர்களுக்காக வழங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

தமிழ் மக்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது உள்ள ஆர்வம் மற்றும் கமல் ஹாசன் போன்ற ஒரு தலைசிறந்த நட்சத்திரம் இதில் பங்கேற்கும் பொழுது இதன் தன்மை மேலும் சிறப்படைகிறது,” என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

 நன்றி -screen 4screenக்கு இங்கே அழுத்தவும்