வாசகர் வட்டம்

Saturday, May 29, 2010

எழுத்தாளர் விழாவில்-பிரபல எழுத்தாளர் ரஞ்சகுமார்-புகைப்படங்கள்

இலங்கையின் முன்னனி எழுத்தாளர்களில் ஒருவரான ரஞ்சகுமார் அவுஸ்திரேலியாவில் இம்மாதம் நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் பங்கு பற்றியிருந்தார் .அத்தருணம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இப்பதிவில் இணைக்கபட்டிருப்பவை.....

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை எழுதி இருந்தார் ..இலங்கையில் சொல்லப்போனால் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் இல்லவே இல்லை என்று..அப்படி உருவாகின ரஞ்சகுமார் போன்ற ஒரு சிலர் இருந்தாலும் ஆரம்பத்திலையே உதிர்ந்து போனவர்கள் என்று ..அதை பொய்மையாக்க பல கால இடைவெளியின் பின்னர் இந்த விழாவில் பரிசு பெற்ற நவகண்டம் என்ற சிறுகதையுடன் மீண்டும் எழுத தொடங்கி விட்டார் என்று நினைக்கிறேன்

.

.இச்செய்தி ...ரஞ்சகுமாரின் வாசகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமென்று நம்புகிறேன்.........

ஜெயமோகன் அத்தருணத்தில் கூறும் போது இலங்கையின் முக்கியமான எழுத்தாளர்கள் பலருக்கு புதுமைபித்தனை யார் என்று தெரியாது என்று....இது பற்றி பல இலங்கை எழுத்தாளர்களுடன் பேசும் போது கூறினார்கள் ....ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களை பற்றி அறிந்தது அவ்வளவு தான் என்று பரிதாப்ட வேண்டி இருக்கிறது .என்று.


அண்ணை தொப்பியும் கண்ணாடியும் ஜீப்பாவும் என்று சோக்காதான் இருக்கிறார்... ...தெரியாமால் தான் கேட்கிறன் ..எழுத்தாளர் என்றால் இது தான் யூனிபோமோ.....

4 comments:

சாவர்ர் இந்தம்பர் said...

/எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை எழுதி இருந்தார் ..இலங்கையில் சொல்லப்போனால் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் இல்லவே இல்லை என்று..அப்படி உருவாகின ரஞ்சகுமார் போன்ற ஒரு சிலர் இருந்தாலும் ஆரம்பத்திலையே உதிர்ந்து போனவர்கள் என்று ./

சின்னக்குட்டி அண்ணர் உப்படிச் சொல்லாதீங்கோ. அடுத்ததா நான் தான் ரஞ்சகுமாரை எழுத வெச்சன் எண்டு போஸ்ற் போட்டுடுவார் அந்த ஆள்

சின்னக்குட்டி said...

வணக்கம் தம்பர் ...கனகாலத்துக்கு பிறகு இந்த பக்கம் ..நன்றி இங்கால பக்கம் எட்டி பார்த்ததுக்கு..

//அடுத்ததா நான் தான் ரஞ்சகுமாரை எழுத வெச்சன் எண்டு போஸ்ற் போட்டுடுவார் அந்த ஆள்//

அதுக்கு ஏன் கனக்க யோசிக்கிறியள் ..இனிமேலாவது அவருக்கு விளங்கட்டுமன் தம்பரின் பவரை -;)

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நல்லதிவு. Facebook ல் பகிர்ந்து கொள்கிறேன்.

சின்னக்குட்டி said...

நன்றி டொக்டர்...