வாசகர் வட்டம்

Thursday, April 21, 2011

துன்பம் துறந்தவன் நான் என்கிறார் -யாழ் சுதாகர்- விகடனில்


தமிழ்நாட்டூ சூரியன் எப்.எம் இரவு நேர அறிப்பாளர் யாழ் சுதாகரை பற்றி ஒரு கட்டுரையை கடைசியாக வந்த ஆனந்த விகடனில் கண்ணுற்றேன். ..யாழ் சுதாகர் எனது பால்ய கால்த்தில் எனக்கு தெரிந்த நண்பரில் ஒருவர். அறிவிப்பாளர் கவிஞர் கட்டுரையாளர் பத்திரிகையாளர் சினிமா விமர்சகர் மற்றும் தமிழ் எழுத்துரு விடயத்தில் ஒரு புரட்சியை செய்தவர்களில் ஒருவரான சுரதா யாழ்வாணனின் சகோதரருமாவார். இந்த கட்டுரையை வாசித்து முடித்தவுடன் என்னுள் ஏற்ப்பட்ட சோக இழை அகல நீண்ட நேரம் எடுத்தது. எனக்கு என்னுள் ஒரு கேள்வியும் எழுந்தது .மற்றவர்களை சந்தோசபடுத்துவர்களின் வாழ்க்கையின் ஏன் எப்போதுமே சோகம் சூழ்ந்து கொள்ளுகிறது என்று ..

யாழ் சுதாகர் சூரியன் பண்பலைத் தொகுப்பாளர் காதல் வயப்பட்டவர்களுக்கும் பிரம்மச்சாரிகளுக்கும் இரவின் தனிமைப் பொழுதுகளைக் காதலால் நிரப்பி வரும் காற்றலை நண்பன். அனைவரின் சோகங்களுக்கும் மெல்லிசைத் தாலாட்டி ஆறுதல் அளிக்கும் யாழ் சுதாகரின் வாழ்க்கை அத்தியாயங்கள் அத்தனையும் சோகச் சுவடுகள் தான்
யாழ்ப்பாணம் எனது சொந்த ஊர் .தந்தை யாழ்வாணர் அங்கு பிரபலமான எழுத்தாளர்.யாழ் இலக்கிய வட்டத்தின் செயலாளராக பல வருடங்களாக இருந்தவர், அப்பொழுதெல்லாம் யாழ் தமிழர் வீடுகளில் இருக்கும் கிராம போன்களில் எந்த நேரமும் பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கும் அவற்றை ஒரு தவம் போல கேட்டுக் கொண்டு இருப்பேன் இன்று நான் பண்பலை நிகழ்ச்சியில் பாடல்களை பற்றித் தரும் தகவல்களுக்கு அந்த கவனிப்புத்தான் காரணம் .வெடி குண்டுகள்,அலறல்கள் அழுகை ஒலிகள் பதுங்கு குழிகள், யுத்தம் ,,ரத்தம் எனக் கழிந்த இளமைக்காலம் சராசரி இளைஞக்கான சந்தோசங்கள் எதுவும் எங்கள் தலைமுறை இளைஞர்களுக்கு வாய்க்கவில்லை. கொடுமைகளை கண்டு கொதித்தவர்கள் இயக்த்தில் சேர்ந்து கொண்டார்கள் நான் சேரவில்லை

1984 இல் மதுரை வந்தவன் அங்குள்ள தியேட்டர் கேன்டீன் ஒன்றில் வேலை பார்த்தேன் . பிறகு சென்னை வாசம் . பலப் பல பத்திரிகைகளில் பணி புரிந்தேன் .விளம்பரப் படங்களுக்கு பிண்ணணிக் குரல் கொடுத்தேன் எனது யாழ்ப்பாணத் தமிழைக் கேட்டு , '' இவன் வாயில் தர்ப்பை புல்லை வைக்க என்று ஒருவன் என் காது படவே கூறீனான்.
எந்த தமிழை வைத்து என்னை கேவலப்படுத்தனானோ அதே தமிழை வைத்து நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தேன் . யாழ்சுதாகர் என்பவன் அப்போது தான் பிறந்தான். 2003 இல் சூரியன் பண்பலை துவக்கப்பட்டது முதல் இப்போது வரை இரவு நேரங்களில் மெல்லைசை ராகங்களை தொகுத்து வழங்கி வருகிறேன் என்றவர். சின்ன இடைவெளி விட்டு பேச தொடங்குகிறார் .என் மனைவி சாந்தி ,,மகன் அருண் பாலாஜீ . அவர்களை பார்க்கிறீர்களா என்று பக்கத்து அறைக்குள அழைத்துச் செல்லுகிறார்.

மலங்க மலங்க பார்த்தபடி அம்மாவின் மடியில் படுத்திருக்கிறான் அருண் பாலாஜி .மகனை தன் மடிக்கு இடம் மாற்றி அவனுடைய தலைமுடியை கோதியபடியே பேசுகிறார் . யாழ் சுதாகர். அருணுக்கு 15 வயசு .ஆனால் அவனால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது . பிறந்தப்பே அவன் இதயத்தில் நாலு துவாரங்கள் இருந்தன . பிறந்த ஏழாவது மாசத்திலையே அவனுக்கு மேஜர் ஆபிரேசன் பண்ணினார்கள் . அதன் பக்கவிளைவின் காரணமாக சுய நினைவினை இழந்து விட்டான் .மூளை வளர்ச்சியும் இல்லாமால் போச்சு .சராசரி மனிதனுக்குரிய உணர்ச்சிகள் மற்றும் எதுவும் தெரியாமால் இருக்கிறான் .எதையும் உணரமுடியாமால் இருக்கிறான் . உடல் வளர்ச்சி மட்டும இருக்கு உள வளர்ச்சி ஏதுமில்லை..இப்ப எல்லாம் அப்பான்று வாயாரா அவன் என்னை கூப்பிடுவதை கேட்காமால் செத்து போயிடுவோனோன்று பயமாக இருக்கிறது. கண்ணீர் துளிர்க்கிறது யாழ் சுதாகருக்கு.

நான் ஒரு கவிதை சொல்லட்டுமா .கொஞ்சம் மனமும் சாந்தமாக இருக்கும் .மெலிதாக சிரித்துவிட்டு யாழ் தமிழில் கவிதை வாசிக்கிறார் சுதாகர்.
தன்னை துறந்தவன்
துன்பங்களை துறக்கிறான்
தன்னை திறந்தவன்
சொர்க்கத்தை திறக்கிறான்

4 comments:

Mahan.Thamesh said...

யாழ் சுதாகரின் நிகழ்ச்சிகளை நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது கேட்டிருக்கிறேன்
மிக சிறந்த அறிவிப்பாளர். அவரின் குடும்ப நிலை என்னை வருத்தம் கொள்ள செய்கிறது

பாட்டு ரசிகன் said...

தகவலுக்கு நன்றி...
படித்தேன்..

ஞாஞளஙலாழன் said...

அந்த கட்டுரையைப் படித்ததில் கண்ணீர் வந்து விட்டது. ஒரு மனிதருக்குத் தான் எத்தனை சோதனைகள். எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லை என்பதால் கடவுளையும் திட்ட முடியவில்லை.

நாடோடிப் பையன் said...

Very sad to hear that he had to face so many obstacles. I pray that God bless his son and his family.