வாசகர் வட்டம்

Monday, November 14, 2011

இதில் நீயா நானா கோபிநாத் செய்தது சரியா ? பிழையா?

4 comments:

Bharathi Raja R said...

தலைப்பைப் பார்த்ததுமே இது பற்றித்தான் இருக்கும் என்று எண்ணியே உள்ளே வந்தேன். நினைத்தபடியே உள்ளது. எனக்கும் இதைப் பார்த்து விட்டு மனம் அறுத்துக் கொண்டே இருந்தது. விசுவில் ஆரம்பித்து இது போல பேச்சரங்கம் நடத்தும் எல்லோருமே செய்கிற தப்பு - கொஞ்சம் அப்பாவி மாதிரிப் பேசுவோரைத் தட்டி அப்படியே உட்கார வைத்து விடுவது. அதற்கு இவரும் விதி விலக்கல்ல என்பது வேதனைதான். ஒருவர் தன கருத்தைத் திறம்பட வெளிப் படுத்த முடியாத ஒரே காரணத்துக்காக அவரைத் தட்டுவது ஒரு பெரும் பாவம். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் அதற்கென்றே காத்திருப்பவர்கள் - அதுவும் கேமரா முன்பு என்றால் - நிறையவே இருக்கிறார்கள். அத்தகைய சூழலை ஏற்படுத்திக் கொடாமல், வந்திருப்பவரைத் தன் விருந்தினராக நடத்தும் நாகரிகம் இவர்களுக்கெல்லாம் எப்போது வரப் போகிறது என்று தெரியவில்லை.

"உங்கள் கோபிநாத்தின் அன்பு வணக்கங்கள்!" என்று தன்னை முன்னிறுத்தி வணக்கம் சொல்ல ஆரம்பித்ததில் இருந்தே இந்த ஆள் மீது கொஞ்சம் கடுப்படிக்க ஆரம்பித்து விட்டது. இன்னொரு கொடுமை - பெண் குட்டிகள் அதிகம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களைக் கவர்வதற்காக இவர் செய்யும் சில வேலைகளும் கொஞ்சம் எரிச்சலூட்டுகின்றன.

இவர் கூடத் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேச முயன்று தப்புத் தப்பாக உலறுவதைச் சொல்லி யாராவது ஒருமுறை தட்டினால் நன்றாக இருக்கும். இதை நிறையப் பேர் இன்னும் கவனிக்க வில்லை என நினைக்கிறேன். கவனிக்க ஆரம்பியுங்கள் தமிழர்களே!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இன்னும் ஒரு படி மேலே சென்று பார்த்தால் இரண்டாவதாக பேசியவர் கொஞ்சம் அப்பாவி போல் இருக்கிறார். அதிலும் ஒரு அம்மா சொல்கிறார் " அந்த பெண் தப்பித்து விட்டாள் என்கிறார் ". கோபி ஐ வன்மையாக கண்டித்தாலும், உண்மையை உணர முடியாத ஒரு சமுதாயமாக தமிழ் சூழல் உருவாகியுள்ளதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.நன்றி சின்னகுட்டி.

நிலாமதி said...

மூன்ரு வருடம் காதலித்து வாழ்ந்துவிட்டு , பெற்றவருக்காக கை விட்டால் இவரது பின் வாழ்க்கை மன உளைச்சலாலே வீணாக.ஆகி விடாதா ?காதல் கேட்டுக் கொண்டுவருவதில்லை