வாசகர் வட்டம்

Friday, January 23, 2015

எம்.ஜீ. ஆர் பற்றிய நீயா நானா-வீடியோ

எம்ஜீஆரை பற்றிய நீயா நானா பார்க்க இங்கே அழுத்தவும்


 இந்த நீயா நானா எம்ஜீஆர் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பார்த்த பொழுது எனது வகுப்பு தோழன் முரளியும் யாழ் சுதாகரும் (சுரதா யாழ் வாணனின் சகோதரர்) நினைவில் வந்து போகிறார்கள்.அவர்கள் சிறுவயதில் இருந்து இன்று வரை ஒரு தீவிரமான எம்ஜீஆர் ரசிகர்கள்

 யாழ் சுதாகர்..தனது வலைபதிவில் எழுதியவற்றில் ஒரு பகுதி கீழே ''''கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்.. ஏற்றி வைக்கப்பட்ட போது எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி] இடையே..ஒரு நூதனமான போட்டி! 'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?' பாடல் காட்சியில் வரும் நான்கு எம்.ஜி.ஆரில் எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு? '''

 (தைரியாமாக சொல் நீ மனிதன்தானே என்ற பாடலின் லிங்)

 இந்தவிவாத்த்தில் சொல்லாமால் விட்ட விசயங்களில் நான் சொல்ல கூடியது ஏதாவது என்றால் ...எம்ஜீஆர் உணர்ச்சி பொங்க நடித்து ரசிகர்களை அழ வைத்த படம் என்றால் பாசம் ...மற்றும் அவர் இறந்த காட்சியில் படம் இருக்கும் என்றால் அந்த பாசம் படம் தான்


உலகம் சுற்று வாலிபன் படம் இந்தியாவில் திரையிடப்பட்ட பொழுது இந்த பாக்கு நீரிணையை இரவில் கடந்து போய் வேதாரண்யத்துக்கு அண்மையிலுள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்து எங்கள் வகுப்பில் அந்த படத்தின் கதையை சொன்ன இன்னுமொரு தீவிரமான எம்ஜீஆர் ரசிகன் வகுப்பு தோழன் ரமேஸ் சுந்தரலிங்கமும் ஞாபகத்தில் வந்து போகிறான் இத்தருணத்தில்

No comments: