
பழம்பெரும் நடிகர் வி.எஸ். ராகவன்(வயது90) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நடிகர் வி.எஸ். ராகவன் வயிற்றுப் புற்றுநோய் பாதிப்பால் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று மாலை சிசிக்சை பலன் இன்றி உயிரிழந்தார். 1954-ஆம் ஆண்டு வைரமாலை என்ற படம் மூலம் தமிழ் திரையிலகில் அறிமுகமான வி.எஸ். ராகவன், 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள அவர், தற்போதைய இளம் நடிகர்களின் படங்களான, ஆல் இன் ஆல் அழகுராஜா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கலகலப்பு, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தனது இளமை பருவ காலத்தில் நாடங்களிலும் முத்திரைப்பதித்து பின்னர் சினிமா அடியெடுத்து வைத்து பல படங்களில் நடித்துள்ள ராகவனுக்கு, தான் சாகும் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி -தினமணி
No comments:
Post a Comment