வாசகர் வட்டம்

Saturday, February 02, 2019

தமிழா..தமிழா ..தமிழ் பேசு ..தடைகள் கடந்து தமிழ் பேசு-வீடியோ

Tuesday, January 29, 2019

1979ஆண்டு இலங்கை வந்த இளையராஜாவுடன் அப்துல் ஹமீத் பேட்டி - ஒலிச்சித்திரம்

Wednesday, January 23, 2019

இணையத்தை கலக்கும்'' very very bad '' பாடல் ..ஆனால் பாடல் very very good -வீடியோ

Saturday, January 19, 2019

LEAKED FOOTAGE-யாரைத்தான் விட்டது மன அழுத்தம் .பிரிட்டிஸ் நாட்டு தலைவி படும் பாடு-வீடி#ஓ

Saturday, January 12, 2019

Sunday, December 30, 2018

comedy is very சீரியஸ் பிசினஸ்-வீடியோ

Tuesday, December 25, 2018

எதிர்பாராத பந்து வீச்சுக்கு திணறும் துடுப்பாட்டுகாரர் மாதிரி திணறினாரா கமலஹாசன் -வீடியோ

கமலை ஸமிருதி ராணி அண்மையில் நடந்த விவாதமொன்றில் தோற்கடித்தார் என்று இப்பொழுது சமூக வலை தளங்களில் ஒரு கேலியும் கிண்டலுமாக கமலை போட்டு தாக்கி கொண்டிருக்கின்றனர்

 அந்த விவாதத்தை பார்க்கும் பொழுது இந்த பிஜேபி யூனியன் மந்திரியுடன் ஏன் இந்த அடி வாங்கி கொண்டிருக்கிறார் என்று  ஒரு சந்தர்பத்தில் சங்கடமாய் இருந்தது ,,

ஆரம்பத்திலேயே நிலைகுலைய வைத்து விட்டால் எவரையும் விவாத்த்தில் வென்று விடலாம் என்பதற்க்கு இந்த விவாதம் ஒரு உதராண்ம்

 சில காலத்துக்கு முன் இந்த ஸ்மிருதி ராணியின் பொய்யான கல்வி தகமை பற்றி சர்ச்சை வந்தது ஞாபகம் வருகுது
இந்த விவாதத்தில் கமலஹாசனுக்கு எதிராக நெறியாளர் அர்னாப் செய்த சதி பற்றி விளக்கும் இன்னொரு காணொளி கீழே
கமல் சுட்டி காட்டி புளாகிங்கத படும் centralism அரசியல் பிரான்சிலும் கொலம்பியாவிலும் இப்பொழுது அடி வாங்கி கொண்டிருக்கிறது


 ஸ்மிருதி ராணி கமல் முழு விவாதத்தை பார்க்க விரும்பின் கீழே

Sunday, December 09, 2018

Wednesday, November 21, 2018

மட்டக்களப்பில் '' பாயோடு ஒட்டிய யாழ்ப்பாணத்தவர்கள் -விவரணம் -வீடியோ

70-80களின் - அன்றைய சினிமா நட்சத்திரங்கள் ...அன்றைய வைபவங்களில் -வீடியோ

கமல் தயாரித்து சத்தியராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு வெற்றிவிழா கூட்டத்தில் சிவாஜி பங்குபற்றிய வீடியோ கீழே எம்ஜீஆருக்கு டாக்டர் பெற்றதுக்கு தமிழ் சினிமாவுலகம் எடுத்த விழாவில் அக்கால சினிமா நட்சத்திர கூட்டம் கீழே

Tuesday, November 20, 2018

கொழுப்பை பற்றி இந்த மதுரை டாக்டர் சொல்றது தான் உண்மையாக இருக்குமோ-வீடியோ

Saturday, November 17, 2018

உலகம் முழுவதும் நடந்த சிறந்த பாரளுமன்ற சண்டைகள் -TIME சஞ்சிகை-வீடியோ

புது வரவாக அண்மையில் இலங்கை பாரளுமன்றத்தில் நடந்த சண்டையையும் சேர்த்து கொள்ளலாம் பார்க்க விரும்பின் கீழே

Wednesday, November 14, 2018

Sunday, November 11, 2018

அன்று ஒரு நாடிருந்ததே ... அது இறந்து போனதோ.?.(MUST WATCH) -வீடியோ

கேரளத்தின் பிரபல பாடகர் ரேஸ்மி சதீஸ் பாடிய சமூக நலன் மிக்க பாடலை காயல் பட்டினத்தின் சிறந்த பாடகர்களில் ஒருவரான கே.ஜே சாஹூல் ஹமீது தமிழில் பாடியுள்ளார்

Saturday, November 03, 2018

1950 களிலையே இந்திய சினிமா உலகில் இப்படி பரிசோதனை ..இது METOO யில் வருமா-வீடியோ

Tuesday, October 23, 2018

Friday, October 12, 2018

Tuesday, October 02, 2018

கண்டியை ஆண்ட இறுதி மன்னன் கதையை வேறொரு கோணத்தில் சொல்லும் திரைபடம் -வீடியோ

) திரைபடத்தின் பெயர் -‘Giri Vasi pura’ (கிரி வெசி புர)

 . நன்கு அறிந்த பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்கள் இந்த திரைபடத்தை பற்றி தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவை கீழே பார்க்கலாம் -நன்றி

 கண்டியினை ஆண்ட நாயக்கர் வம்சம், நயவஞ்சகத்தால் அழிந்தொழிந்த கதை. ‘ஹங்குரங்கெத’ பிரதேசத்தில் விவசாயக்கடும்பத்தில் பிறந்த ‘கண்ணுச் சாமி’, எனும் இளைஞன், ஶ்ரீவிக்ரம ராஜசிங்கனாக்கபட்ட கதையையும், மதவாதம்,இனவாதம் என்ற பேரில், பேரின வாதிகள் தம் சுயநலத்திற்காக எவ்வாறெல்லாம் சூழ்ச்சிகள் செய்து அம்மன்னனைப் பலிகடாவாக்கினார்கள். என்பதையும், வரலாற்று ஆசிரியர்கள் எவ்வறெல்லாம் பொய்யுரைத்து அவனக் கொடுங்கோலனாகச் சித்தரித்துள்ளார்கள்

, அவனது உண்மையான குண இயல்புகள் என்ன, என்பதையெல்லாம் மிக நேர்த்தியாகவும் நெகிழ்ச்சியோடும் சித்தரித்திருந்தார்-திரைக்கதாசிரியரும் இயக்குனருமான திரு. Daevinda Kongahage.

தமிழில் பேசவேண்டிய கதை மாந்தர்கள் தமிழிலேயே பேசினார்கள். பிரித்தானிய பாத்திரங்கள் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். பெரும்பாலான உரையாடல்கள் சிங்கள மொழியில் அமைந்திருந்தாலும், இதனை ஒரு மும்மொழித் திரைப்படம் என்றுதான் வகைப்படுத்தவேண்டும்.
கண்ணுச்சாமி என்ற ஶ்ரீவிக்ரம ராஜசிங்கனாக நடித்த Pubudu Chathuranga நிறைவாகவே அந்த பாத்திரத்திற்கு உயிரூட்டினார்

. மகாராணி ரங்கநாயகி (வேங்கட ரெங்கம்மாள்)பாத்திரமேற்ற நிரஞ்ஜணி ஷண்முகராஜாவுக்கு இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் என்றுதான் சொல்லவேண்டும். விழாவில் திரைப்படக்குழுவினர் அவருக்களித்த முக்கியத்துவம் கலைஞர்கள் மத்தியில் ’வேற்றுமையிலும் ஒற்றுமை’ பேணுவதற்கு முன்னுதாரணமாயிருந்து.
 நிரஞ்சணியும் அப்பாத்திரத்தை மிகுந்த தேர்ச்சியுடன் சித்தரித்திருந்தார். தமிழகத் திரைப்படங்களிலும் கூட, பாடல்கள் இயற்றிய பெருமைக்குரிய, நமது மண்ணின் கவிஞர் ‘பொத்துவில் அஸ்மின்’ தனித்தமிழ் வரிகளில் ஒரு முழுப்பாடலையே இயற்றியிருந்தார்.
மீனா பிரியதர்ஷணி என்ற இளம் சிங்களப்பாடகி தெளிவான உச்சரிப்புடன் இனிமையாகவே பாடி, அஸ்மினுக்குப் பெருமை சேர்த்திருந்தார். வரலாற்றுத் திரைப்படங்களென்றாலே, அரண்மனை, அந்தப்புறம், யுத்தக்காட்சிகளையெல்லாம், கற்பனைக்கெட்டாத அளவு, பலமடங்கு மிகைப்படுத்தியும் Graphics உத்திகள் மூலம் பிரம்மாண்டப்படுத்தியும் காட்டுவார்கள். உண்மையில் அன்றைய மக்கள் தொகையினைக் கணக்கிட்டால் சில நூற்றுக்கணக்கில் மட்டுமே போர் வீரர்கள் இருப்பார்கள், பழங்காலத்து அரண்மனைகள் ( இப்போதும் சில பேணப்பட்டுள்ளவை போன்று) அப்போது உண்மையில் எப்படி இருந்திருக்கும் என்பதையெல்லாம் மிக இயல்பாக சித்திரித்திருந்தார்கள்.
 எந்தவொரு இனத்தையும் கொச்சைப்படுத்தாமல் அதேவேளை பெரும்பான்மை இனத்தில் அன்றிருந்த சந்தர்ப்பவாதிகளைத் தோலுரித்துக் காட்டிய துணிச்சல் பாராட்டிற்குறியது. தனக்குத் துரோகமிழைத்த ‘எகலப்பலை’யின் குழந்தைகளைப் பெற்ற தாயைக்கொண்டே உரலில் போட்டு இடிக்கவைத்த ‘கண்டிய மன்னன் கதையை’, நடிகர்திலகம் கூட ஒரு திரைப்படத்தில் நாடகமாக நடித்திருப்பார்.
அவை எல்லாம் எவ்வளவு பச்சைப் பொய் என்பதை, இயக்குனர் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். திரைப்படம் நிறைவடையும் போது சூழ்லைநிலைக் கைதியாக மாறிப்போன கண்ணுச்சாமின் மேல், நம் எல்லோரையும் அனுதாபம் கொள்ள வைத்ததில்- இயக்குனர் வெற்றியடைந்துள்ளார்.

 மிக முக்கிய விடயம்- திரைப்படத்தின் நிறைவில் பின்னணியில் ஒலிக்கும் குரல் மூலமாக -‘பேரின வாதிகளாய் செயல்பட்ட S.W.R.D. பண்டாரநாயக்க மற்றும் J.R.ஜயவர்தன இருவரதும் பூர்வீக ‘வேர்கள்’ என்ன என்று சுட்டிக்காட்டிய அசாத்தியத் துணிச்சலுக்காக, இயக்குனர் Daevinda Kongahage அவர்களுக்கு ஒரு பூங்கொத்து வழங்கிப் பாராட்ட வேண்டும். இனப் பாகுபாடின்றி எல்லோருமே, ஒருமுறை பார்க்கவேண்டிய திரைப்படம்.

கண்டி அரசனை பற்றி  இவ்வளவு காலமும் இப்படி தான்  பொய்யாய்காட்டி இருந்தார்கள் கூத்துகளாக அது பற்றி பார்க்க விரும்பின் கீழே உள்ள லிங்கை தட்டி பாருங்கள்
https://sinnakuddy1.blogspot.com/2013/05/blog-post.html