வாசகர் வட்டம்

Sunday, March 30, 2014

சிறப்பு பாடல் -யாழ் இணையத்துக்கு இப்ப 16 வயது-வீடியோ
கம்பியூட்டரில் தமிழ் என்று அதிசயத்துடன் பார்த்து பிரமித்தும் கொண்டு பார்த்து கொண்டும் இருக்கும் பொழுது இந்த யாழ் இணையம் எனக்கு கண்ணில பட்டது . இதில் பங்கு பெறுபவர்கள் கல்வியாளர்களாக இருக்க கூடும் மேதாவிகளாக இருக்க கூடும் நினைத்தேன் ,. நமக்கு இங்கு என்ன வேலை? அதுவும் அழகு தமிழில் எழுதி விவாதிக்கும் பொழுது பிரமிப்பு இருக்காதா என்ன?.. அத்துடன் எனது வாழ்வுயிலில் கம்பியூட்டருக்கும் எனக்கு தொடர்பே இல்லாத நிலையில் இருந்தும் கூட இவர்கள் மாதிரி தமிழ் எழுத மாட்டனா என்ற நப்பாசை ஏனோ எழுந்தது..

. அதிர்சட வசமாக யாழ் இணையம் இலகுவாக அறிமுகபடுத்தி வைத்திருந்த பாமினி உரு தட்டச்சு முறை தமிழில் எழுத பழக்கியது .அதன் மூலம் யாழில் எழுதி பார்த்தேன் .ஆமா நானும் தமிழில் எழுதுகிறேன் என்று சந்தோசம் பொங்க பிறவி பயன் பெற்ற இன்பத்தை அடைந்தேன். அந்த எழுத்தின் சில வரவேற்பு ஊக்கத்தின் மூலம் வலைபதிவை உருவாக்கி எழுத தொடங்கினேன் 

. இந்த சிறியோனை தமிழில் எழுத வைத்த யாழ் இணயத்துக்கு எனது வாழ்த்துக்கள் . யாழ் இணையத்தின் பொது கருத்தோடு சில வேளை ஒத்து போக முடியாமால் சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுதும் வலிந்து ஒரு சமரச போக்கை என்னுள் உருவாக்கி யாழ் இணையத்தில் இருந்து தூர போகாமால் அதனுடன் பயணித்திருக்கிறேன் என்று நம்புகிறேன் . 


மீண்டும் வாழ்த்துக்கள் யாழ் இணையத்துக்கு

1 comment:

தனிமரம் said...

வாழ்த்துக்கள் இன்னும் சேவை தொடரட்டும்.