வாசகர் வட்டம்

Tuesday, June 10, 2014

திருநங்கைகள் பற்றிய நல்லதொரு விவாதம் நீயா நானாவில்-வீடியோ




திருநங்கைகள் பற்றிய நல்ல தொரு விவாதம் நீயா நானாவில்

மேலைதேய நாடுகளிலும் பெருவாரியாக திருநங்கைகளை கண்டிருக்கிறோம் . 

ஆனால் இலங்கையில் இந்த திருநங்கைகள் இதே பிரச்சனைகள் வெளியில் வந்திருக்க வேண்டுமே..பொதுவானவையாக குறிப்பிடுவது என்றால் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தல் , பிச்சை எடுத்தல் , பாலியல் தொழில் செய்தல்
பள்ளிக்கூடங்களில் சிலரை கூட படிப்பவரை கண்டிருந்தாலும் முற்றும் முழுவதுமாக பெண்ணாகவோ மாறியவரை கண்டது குறைவு

கூடிய சனத்தொகையின் வீதத்துக்கு ஏற்ப அவர்களின் வீதமும் கூட தெரிகிறார்கள் என்று ஒரு வாத்த்துக்கு ஏற்று கொண்டாலும் அந்த சனத்தொகையின் வீத்த்துக்கு ஏற்பாவாது இது இலங்கையில் அதுவும் குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதியில் தெரிந்திருக்கோணும். பிரச்சனைகள் வெளியில் வந்திருக்கவோணும் ,,,அப்படி வந்த்தாக எனக்கு தெரிந்த வரையில் இல்லை

அப்ப ஒரு முடிவுக்கு வரலாமா .

..சனத்தொகையின் அடிப்படையில் இலங்கையிலும் திருநங்கைகள் அந்த சனத்தொகையின் அளவுக்கு ஏற்ப இருக்கிறார்கள் .

ஆனால் ..பெற்றோர்கள் வீட்டை விட்டு துரத்துவது இல்லை

பிச்சை எடுக்க வேண்டி தேவை இருக்கவில்லை

பாலியல் தேவை செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை

குழுவாக சேர்ந்து இருக்க வேண்டிய விசயம் இருக்கவில்லை

இதனால் இந்த விசயத்தில் இலங்கை பெற்றோரை மற்றும் சமூகத்தை கொஞ்ச நாகரிகம் அடைந்த முற்போக்கானவர்களாக கொள்ளலாமா

8 comments:

ராஜி said...

இலங்கையை பார்த்து நாம கத்துக்கனும்

Aba said...

இங்கே அதைப் பற்றிய விழிப்புணர்வு இந்தியா அளவிற்குக் கூட இல்லை. பெற்றோருக்கும் தனது பிள்ளைகள் திருநங்கைகள் இன்று தெரிவது கூட இல்லை.

சின்னக்குட்டி said...

//இங்கே அதைப் பற்றிய விழிப்புணர்வு இந்தியா அளவிற்குக் கூட இல்லை. பெற்றோருக்கும் தனது பிள்ளைகள் திருநங்கைகள் இன்று தெரிவது கூட இல்லை//

பெற்றோர்களுக்கு திருநங்கைகள் என்ற விழிப்புணர்வு வந்து இந்தியா மாதிரி வீட்டை விட்டு துரத்துணும் என்கிறீங்களா?

பிள்ளைகள் தங்களை திருநங்கைகளாக உணர முடியாமால் அடக்கி ஒடுக்க படுகிறார்கள் அதால் பாதிக்கபடுகிறார்கள் ஆகவே விழிபுணர்வு தேவை என்றால் அது நியாயம்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன், இது வரை நடத்தியதில் என்னைப் பெறுத்தமட்டில் சிறந்த நிகழ்ச்சி என்பது என் கருத்து.
சுதா, பிரியா பாபு மிகச் சிறப்பாகத் தங்கள் கருத்தை வைத்தார்கள். சுதாவின் முதல்வர் "அம்மா" வின் குரல் கலக்கல்.
கல்லாப்பெட்டியில் இருந்தவர் காலணா பிச்சையெடுத்ததும், அவர் கடையையே கடந்து சகோதரியுடன் சைகையால் பேசியதும் மிக வேதனையைத் தந்தது.
மிக எரிச்சலைத் தந்தது சரிகைச் சிப்பாவுடன் பூச்சும் புனஸ்காரமுமாக வந்திருந்த ஒரு முண்டத்தில்
கருத்து, ஆனால் அவரை பின் அதிகம் பேசவிடாதது ஆறுதல்.
இவர்களில் பலரை தன் குடும்பத்துடன் இணைத்துப் பாதுகாப்போர், வீடு கொடுத்தவர் எனப் பலர்
மனதைத் தொட்டார்கள். மொத்தத்தில் இந் நிகழ்ச்சி இனியாவது இவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
சிலர் கல்வித் தகமை என்னை நெளிய வைத்தது.
அடுத்து இலங்கையில் பல பகுதிகளில் சென்றவன் என்ற வகையில் , இவர்கள் குடும்பத்தால் ஒதுக்கப்படவில்லை,தனிமைப்படுத்தப்படவில்லை. நீங்கள் கூறியது போல் பிச்சையெடுக்கவில்லை.குறிப்பாகப் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை.
ஆனால் இலங்கையில் இவர்கள் போல் எவருமே முற்றாகப் பெண் உடைக்கு மாறவுமில்லை என்பதைக் கூறவிரும்புகிறேன். நீங்கள் கண்டுள்ளீர்களா?
எனக்குத் தெரிந்தவர் பெண்ணுக்குரிய நளினங்கள் சற்று தூக்கலாக சைககளில்,பேச்சில்,கண் பார்வையில் இருக்கும் ஆனால் உடை ஆண் உடுப்பே! இவர் வீட்டில் சிலசமயம் பெண் உடை உடுத்தி மகிழ்ந்துள்ளார். மிக அழகாக நடனமாடுவார். அத்துடன் ஆண்களை விட இவர் நட்பு வட்டம் பெண்களே! எவராலும் ஒதுக்கப்படவில்லை. திருமணம் செய்து இப்போ திருமணவயதில் பிள்ளைகள் உள்ளதாக அறிந்தேன். அவருக்குப் பெண் உடுப்பு உடுத்தினால் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்கள் போலிருப்பார்.
இந்த விடயத்தில் இலங்கையில் எல்லா இனமும் இவர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாகப் படுகிறது. நிச்சயம் சனத்தொகையில் அளவுக்குத் தக்க இருந்த போதும் அவர்கள் ஒதுக்கப்படவில்லை. ஒருவேளை இவர்கள் அதீத சுதந்திரத்துடன் பெண் உடைக்கு மாறாததோ? இலங்கையில் உள்ளோர் பெண் உடைக்கு மாறியிருந்தால், அதன் தாக்கம் சில சமயம் வேறு மாதிரி இருக்குமோ? ஆனாலும் இளமையில் இவர்களில் பெண் நளினங்கள் பாடசாலையிலோ, தெருவிலோ, பொது இடத்திலோ கேலி செய்யப்படவில்லை. அதனால் இவர்களும் ஒதுங்கவில்லை. இது தொடர வேண்டும்.
சாதி மாற்றுத் திருமணங்களை இலங்கையில் பெரிய பிரச்சனையாக்குவதில்லையே, அப்படி இதையும் சகிக்கிறார்கள் போல்....
மேலும் பிரபல கர்நாடக இசைப் பாடகர் ஒ எஸ் அருண், இயக்குநர் நகைச்சுவை நடிகர் மனோபாலா, ஒரு திரைப் பட நடன இயக்குநர் போன்ற பிரபலங்களில் இத் தன்மை, நளினம் உண்டு ஆனால் இவர்கள் பெண் உடை உடுத்தவில்லை. என் அனுமானத்தில் தவறெனில் சகலரும் என்னை மன்னிக்கவும்.
அதனால் பொறுப்பாக இவர்கள் பாதையை மாற்ற இவர்கள் குடும்பமே ஆரம்பத்தில் கவனமெடுக்க வேண்டும்.
எப்படியோ இந் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரின் மனதில் இவர்கள் பற்றிய பிம்பம் மாறியிருக்குமென நம்புவோம்.
இறுதியாக திருநங்கைச் சகோதரிகளுக்கு - உங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்துள்ளனீர்கள்
அதில் நீங்கள் தவிர்க்க வேண்டியதுமுள்ளது . அதீத ஒப்பனை, சாதாரண பெண்னை விட அதீத நளினம் , கூட்டாய்ச் சேரும் போது அடுத்தவருக்கு இடைச்சலான சீண்டல்.
சுதா, பிரியா பாபு, முன்வரிசையில் இருந்த பாடசாலை இரசாயன ஆசிரியரால் அவமானப் பட்ட அருணா போன்று எளிமையாக இருங்கள். சுதா மொத்தம் பெண்ணாகவே தெரிகிறார்.
ஆரம்பத்தில் பதிவுகள் எழுதிய "லிவ்விங் ஸ்மைல் வித்யா" அவர்கள் பற்றியும் அவர் எழுதிய - நான் சரவணன் - வித்யா எனும் புத்தகத்தையும் படித்தால், இவர்கள் வலியை இன்னும் உணரலாம்.
இவர்கள் வாழ்வில் வளர்ந்த நாடுகள் போல் மாற்றம் வரட்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
இதையும் படியுங்கள். உங்கள் கருத்தையும் இடுங்கள்.

http://rajiyinkanavugal.blogspot.fr/2014/06/blog-post_9.html?showComment=1402359943505#c3239039135555335103&id=1482856

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அபராஜிதன் ஞானேஸ்வரனுக்கு!
இலங்கையில் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை எனக் கூறுயுள்ளீர்கள். நான் மறுக்கிறேன். இளமையில் இவர்கள் நளினங்கள் நன்கு விழிப்புடனும், உணர்வுடனும் அணுகப்படுகிறது. இதை நானறிவேன். ஆனால் அதட்டி, உறுக்கு அவர்கள் மனமுடைந்து ஓட வைப்பதில்லை.
அழிந்த குமர்களை ஜெயகாந்தனின் "அக்கினிப் பிரவேசத்தில்" என நினைக்கிறேன். தலையில் தண்ணீர் ஊற்றி விட்டு வாழ வைப்பது போல், அனுசரணையுடன் அதிலிருந்து மீட்கிறார்கள். பெண் உடுப்புடன் வெளியேறுமளவுக்கு அவர்களை மனம் மாறாமல் காக்கிறார்கள்.
அத்துடன் இப்படி ஓடினால் இவர்களை ஆதரிக்க இப்படிப்பட்டோர் குழுவுமில்லை.அதனால் நாளை என்ன ஆகும் எனும் பயம் சாதாரண ஆணுக்கு உள்ளது போல் இவர்களுக்குமுள்ளதால் சொந்தக்காலில் நிற்பது பற்றிய உணர்வு ஊட்டப்படும்போது, இவர்கள் அதீத நாட்டம் குறைகிறது.
ஆனால் இந்தியாவில் உள்ளது போல் இளமையில் வீட்டை விட்டு ஓடினால் சோறும், தங்க இடமும் கிடைக்குமெனும் நிலை வந்தால், சிந்திக்க வேண்டித்தான் உள்ளது.
அப்படி ஒரு நிலை வராமல் காப்பது எம் கையில்தான் உண்டு. அது பெற்றோர், உடன் பிறந்தோர் கையிலேயே உண்டு. அது அரவணைப்பு...

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகண்ணை இந்த பதிவோடையொட்டிய உங்களது நீண்ட பல தகவல்கள் அடங்கிய கருத்துகளுக்கு நன்றி ....

இப்ப உங்களுடைய எழுத்து நடை மிகவும் நன்றாக இருக்கிறது முன்பிலும் பார்க்க...