வாசகர் வட்டம்

Monday, September 21, 2020

தட்டி வான் ...மறக்க முடியாத ஒரு காலத்தின் பொக்கிசம் - அது பற்றிய ஆவணபடம்-வீடியோ

Saturday, September 19, 2020

வெளிநாட்டு ஒருவரின் பார்வையில் 70 களில் சென்னை (Madras)-வீடியோ

Monday, September 14, 2020

ஊரு சனம் தூங்கவில்லையென ஏங்கும் දෙමළ நங்கியும் සිංහල தங்கச்சியும்

Saturday, September 12, 2020

நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளை கொண்டாடும் சமூக வலைதளங்கள்-வீடியோ

Thursday, September 03, 2020

வாடைகாற்று திரைபடத்தின் சில ஒளி காட்சிகளும் திரைபடத்தை பற்றிய பேட்டியும்-வீடியோ

வாடைகாற்று திரைபடத்தின் முழு திரைபடத்தை மீண்டும் பார்க்க முடியாத சூழலில் (1983 காரணமாக இருக்கலாம்) 

 அப்படத்தின் சில வீடியோ காட்சிகளையும் அப்படத்தின் தாயாரிப்பாளரினதும் 

 அந்த படத்தில் நடித்த அண்ணை றைற் புகழ் கே.எஸ் பாலசந்திரினின் பேட்டியையும் ஒளி காட்சியாக இந்த பதிவில் பார்க்கலாம்

 கிடைத்த சில ஒளிகாட்சிகளில் சந்திரகலா ,இந்திரகுமார்,ஆனந்தராணி ,ஏ.ஈ மனோகரன் போன்றோர் தோன்றுகின்றனர்

Sunday, August 30, 2020

மல்லிகை ஆசிரியர் .எழுத்தாளர் டொமினிக் ஜீவா -வீடியோ

Friday, August 21, 2020

''உமாவின் விநோத வேளை'' கே.எஸ் ராஜா ..இலங்கை வானொலி மலரும் நினைவுகள்-வீடியோ

Wednesday, August 19, 2020

கைலாசா தேச உருவாக்கத்துக்கு பின்னால் புலம் பெயர் சிறீலங்கா தமிழர்கள் - முன்னாள் சிபிஜ அதிகாரி ரகோத்தரமன்-வீடியோ

நித்தியானந்தா ஈக்வோடர் என்ற நாட்டிலுள்ள ஒரு தீவை வாங்கி கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்க முனைவதை அறிந்ததே 

 இந்த உருவாக்கத்து முயற்சிக்கு பின்னால் கனடா அமெரிக்க பிரெஞ்ச் இலங்கை தமிழர்கள் தான் பேருதவியாக இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தனை முன் வைக்கிறார் ராஜீவ் கொலையை விசாரணை செயத முன்னாள் சிபிஜ அதிகாரியான ரகோத்திரமன் 

 யாழ்ப்பாண தமிழர் வீர சைவர்கள் சைவ மத்த்தில் பற்று உள்ளவர்கள் தங்கள் கொள்கைகளில் உறுதியானவர்கள் என்று அடுக்கி கொண்டே போகிறார் தனது சந்தேகத்துக்கு வலுவேற்ற அது மட்டுமல்ல ராஜீவ் கொலை நடந்த இடத்தில் இருந்தது என்ன தெரியுமா என்று கேட்டு பதிலே அவரே சொல்லுகிறார்  

 இருந்தது கந்த ஷஸ்டி கவசமாம் நம்ம காங்கிரஸ்காரன் படிப்பானா என்று எள்ளி நகையாடி விட்டு 

 தற்கொலையாளி தனு தான் தனது மனோதைரியத்தை கூட்டுவதற்க்காக கந்த சஸ்டி கவசம் படிக்க கொண்டு வந்தார் என்கிறார் தனது கருத்து வலு சேர்ப்பதறக்காக

 நம்ம யாழ்ப்பாண வீர சைவ தமிழன் எப்ப கந்த சஸ்டி தொடங்க முடிய முந்தியோ பிந்தியோ ஆடு அடித்து சாப்பிட்டு தான் விரதமே பிடிப்பான் என்றது சிபிஜ அதிகாரிக்கு தெரியாது போலை 

 எல்லா சங்கிகளும் ஒரு அஐண்டாவோட திரிகிறான்கள் போலை

Thursday, July 30, 2020

Eckhart Tolle -இந்த 15 நிமிட தியானம் 5 நிமிடத்தில் நிகழ்வது போல தோன்றும்-வீடியோ

Eckhart Tolle – ET என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு சிறந்த மேலை நாட்டு தத்துவ ஞானி ஆவார் ” நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி ” என்று பாடம் சொல்லிக்கொடுக்கின்றார் – ” How to Live in the Present இவருடைய power of now என்ற புத்தகம் உலகில் அதிகம் விற்க்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று என கூறப்படுகிறது

Wednesday, July 29, 2020

நடிகர் திலகம் சிவாஜிக்கு சிங்கப்பூரின் முதல் மரியாதை-வீடியோ

Monday, July 27, 2020

அல்லா.. அல்லா என்ற வாலி எழுதிய பாடல் ஏன் இலங்கையில் தடை செய்யப்பட்டது?-வீடியோ

Sunday, July 26, 2020

இலங்கை வானொலி- கே.எஸ் .ராஜா -அற்புத மந்திர குரல்-வீடியோ

Thursday, July 23, 2020

இலங்கை ஆடி 23 திகதி 1983 ஆண்டு இனகலவரம் -பிபிசி -4 டிவியில் வந்த ஆவணபடம்-வீடியோ

Saturday, July 11, 2020

ஈழப்போர் பற்றி எழுதிய உண்மை ..கற்பனை அல்ல -எழுத்தாளர் அ.முத்துலிங்கம்-வீடியோ

Wednesday, July 08, 2020

Friday, July 03, 2020

எழுத்தாளர் அ.முத்துலிங்கம்- தனிநாடு கேட்டு இவ்வளவு சண்டை நடந்திருக்க தேவையில்லை விகடன் டிவியில் - வீடியோ

ஜேசுதாசின் Live Performance -Gori Tere Gaon Bada Pyara - தேசிய விருது பெற்ற பாடல்-வீடியோ

Thursday, July 02, 2020

ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் -ஜெயகாந்தன் - ஒலி பெட்டகம்-வீடியோ

இது வழமையான audio book மாதிரி வரி்க்கு வரி வாசிக்காமால் தான் வாசி்த்ததை தான் விளங்கிகொண்டதை ஒலி குறிப்பாக பகிர்கிறார்

Thursday, June 25, 2020

திருமணத்துக்கு முன் சந்திப்பு அவசியமா?-முன்னாள் மகாஜானா அதிபர் -வீடியோ

Thursday, June 18, 2020

Tuesday, June 16, 2020

60களில் வந்த திரைபடங்களின் பேசும் பட சஞ்சிகையின் அட்டை -வீடியோ


 

 இந்த 60-70 கால பகுதியில் எங்களுக்கு 1-11 வயது தான் இருக்கும் .

ஆனால் இதில் தெரியும் திரைபடங்கள் அநேகமாக பார்த்திருப்போம்

 எப்படி என்றீங்களா..
70 களில் வேற புதிய திரைபடங்களுக்கு சிறிமா அரசாங்கம் கட்டுப்பாடு விதித்தால் 

இதை தான் திரும்ப திரும்ப போட்டு தொலைப்பாங்கள் 

 நம்ம ஊர் தியேட்டர்கார்ர்கள் .. வேற வழியில்லை ..நாமளும் பார்த்து தீர்த்தோம்

அந்த கால யாழ்ப்பாணத்து வயலும் வாழ்வும் -சில்லையூர் புலோலியூர் தம்பதிகள்-வீடியோ

நடிகர்கள் - சில்லையூர் செல்வராஜன் ,கமலினி செல்வராஜன் (அந்த கால வானொலி திரைபட கலைஞர்கள்....மக்கள் வங்கியின் அத்தானேஅத்தனே விளம்பர பாடலை பாடுவினமே 

அவைதான் பிரபல இசையமைப்ப்பாளர் லிங்குசாம்மி இசையில்

 ஏர் பூட்டி துலா மிதித்து வாய்க்கால் வெட்டி தண்ணி இறைக்கிற மெசினில் குளித்து ..
பல யாழ் விவசாய கிராமத்து நினைவுகளை தருகிறது இந்த விவரணம்..
.90 கிட்ஸ் க்கு தெரியாதவை பல இதில்

50 களில் நடந்த ALL CEYLON BICYCLE மரதன் போட்டி-வீடியோ


50 களில் இலங்கையில் ஓடிய இ.போ.ச பஸ் களின் சரித்திரம்-வீடியோ

Sunday, June 14, 2020

நான் தான் சுட்டேன் எம்ஜிஆரை-எம் ஆர் ராதா மலேசிய உரை-வீடியோ

Saturday, June 13, 2020

AN அமெரிக்கன் in Madras-வீடியோ (தமிழ்ப்படங்களை இயக்கிய அமெரிக்க இயக்குனர்- எல்லிஸ் ரோட்ரிக் டங்கன்.)

அமெரிக்காவில் பிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் எல்லிஸ் ஆர்.ரோட்ரிக் டங்கன்  30 கள் மற்றும் ‘40 களில் வளர்ந்து வரும் தமிழ் திரைப்படத் தொழிலுக்கு பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைக் கொண்டுவந்தார்.

 இதெல்லாம், மொழியைப் புரிந்து கொள்ளாமல்! சிறந்த தமிழ் சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரின் முதல் படமான சதி லீலவதியையும், அதேபோல் புகழ்பெற்ற கர்நாடக பாடகர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் மிகப் பிரபலமான படங்களான சகுந்தலை மற்றும் மீராவையும் துங்கன் இயக்கியுள்ளார்.

Friday, June 12, 2020

கமலுடன் இசையமைப்பாளர் ரஹ்மான் ஒரு கலந்துரையாடல்-வீடியோ

Wednesday, June 03, 2020

அந்த நாள் ஞாபகங்கள் .வந்ததே-வீடியோ

Monday, May 04, 2020

1898 தொடக்கம் 1960 வரையிலான கொழும்பு அரிய வீடியோ காட்சிகளாக -வீடியோ

Sunday, May 03, 2020

Tuesday, April 28, 2020

உடலுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம் ...( நல்லதொரு உரை பார்க்க தப்ப விடாதீர்கள் )-வீடியோ

PENTAGEN உத்தியோகபூர்வமாக வெளியிட்ட (27.04.20) வேற்று கிரவாசி பற்றிய-வீடியோ

Wednesday, April 08, 2020

கொரோனா சாரை பேட்டி எடுத்த பொழுது ...யாருக்கும் குடுக்காத கை-வீடியோ

கொரோனா வதந்தியால் 5G செல்போன் TOWER எரிப்பு இங்கிலாந்தில்-வீடியோ

Wednesday, April 01, 2020

Tuesday, March 31, 2020

2019 ஆண்டு கொரோனாவை கணித்த சிறுவன், அடுத்து என்ன நடக்கபோகிறது-வீடியோ

Saturday, March 07, 2020

VERY VERY BAD..காக்கி கலர் எங்களை ஏன் அடிக்கிறாய் ..ஜிப்சி படத்தின் (CENSOR)பாடல் -வீடியொ

Saturday, February 29, 2020

Thursday, February 13, 2020

இன்று உலக வானொலி தினம்( 2020 )-அதனால் சில நினைவு வீடியோக்கள்-வீடியோ

பழங்கால வானொலிகள் இலங்கை வானொலியில் டி எம் செளந்திரராஜனின் பேட்டி யாழ் சுதாகரின் இலங்கை வானொலி நினைவு அலைகள் ..யாழ் சுதாகர் நெல்லியடி வதிரியையும் யாழ் நகரத்தையும் வதிவிடமாக கொண்டவர் நெல்லியடி தனியார் கல்வி நிலையங்களில் 80களில் ஆசிரியராக இருந்தவர் 70 - 80களில் எம்மவர் வானொலி நாடகம் - மண் மணம் கமழும் “கிராமத்துக் கனவுகள்”

Monday, February 10, 2020

ஆஸ்கார் விருதுகள் ...யார் யாருக்கு -வீடியோ

Sunday, February 09, 2020

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019-வீடியோ

Saturday, February 08, 2020

1979 ஆண்டில் இலங்கை வானொலிக்கு இளையராஜா அளித்த பேட்டி -வீடியோ

Saturday, February 01, 2020

அபிஷ்ட்டுகாளா; இதை கேளுங்கள் ,தமிழர்களுடைது தான் ஆகமம் மந்திரமும்-வீடியோ

Thursday, January 30, 2020

சீனாவிலிருந்து கடைசியாக வந்த விமானம் -வீடியோ

Monday, January 27, 2020

இனி வரும் தலைமுறைக்கு இங்கு வாழுதல் சாத்தியமோ ?(பாடல்)-வீடியோ

Thursday, January 23, 2020

பெரியாரை பத்தி பேச நீ யாருய்யா? கேவலமான மனிதர் ரஜனி காந்த்-வீடியோ

ரஜனிகாந்தின் பெரியாரை பற்றிய கூற்றுக்கு ..கட்சிகள் ஆதரவாளர்கள் அபிமானிகள் இயக்கங்கள் தனிநபர்கள் முக்கி முனகி சல்லாப்பி அளித்த பதில் அளிப்பிலும் பார்க்க ..இந்த நேர்காணலில் டொக்டர் ஷாலினி அளித்த பதில்கள் மிகவும் காத்திரமானதாக இருக்கின்றன


 ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் என்று கேள்வி பட்டிருப்பீர்கள் ..ராமர் தற்கொலை செய்து கொண்டார் என்று ஷாலினி இந்த பேட்டியில் சொல்லித்தான் புது செய்தியாக எனக்கு இருந்த்து

 இராமன் தற்கொலை செய்து கொண்டமையால் இராமருக்கு கோயில் அயோத்தியில் கட்டமாட்டார்கள்

..இராமர் ஒரு அமங்கலமானவர் அதனால் அவருக்கு ஆகம விதிப்படி கோயில் கட்ட முடியாது என்று ஷாலின் கூறுகிறார்..இப்படி பல சுவராசியமான சம்பவங்களை இந்த பேட்டியில் காணலாம்

Thursday, January 09, 2020

யாழில் 2016 ஆண்டு நடந்த எஸ் பி குழுவினரின் இசை நிகழ்ச்சி(முழுமையாக)-வீடியோ

Thursday, January 02, 2020

முதுமையில் ரசனை மாறமாலும் UPDATE ஆகி கொண்டு இருங்கள் - வீடியோ

Sunday, December 29, 2019

குடியுரிமையின்றி அல்லல்படும் இலங்கை அகதிகள் தமிழகத்தில் (விவாத மேடை)-வீடியோ

Wednesday, December 25, 2019

Monday, December 09, 2019

Wednesday, November 27, 2019

'''இதுவும் ஒரு ஆயுதம் தான்''....சூப்பர் ..சும்மா கிழிச்சிட்டாங்கள் ,,போங்க-வீடியோ

Monday, November 18, 2019

Tuesday, November 12, 2019

கமலின் APPU RAJA (அபூர்வ சகோதரர்கள் )success party -80 களின் ஹிந்தி நடிகர் நடிகைகளுடன்-வீடியோ

Sunday, November 10, 2019

''ஹே ராம்'' திரைபடத்திலுள்ள நுணுக்கங்கள் - திரைகதை ஆசிரியர் M.k மணியின் பார்வையில்-வீடியோ

போனசாக கீழே ஒரு வீடியோ அதுவும் ஹேராம் பற்றிய நுணுக்கங்கள் பற்றி பேசுகிறது பேசுறவர் வேறொருவர் ஹேராம் முழு திரைபடம் கீழே

Monday, November 04, 2019

Saturday, October 19, 2019

தமிழ் எழுத்துக்களின் வேரை தேடி ...ஹிபொப் தமிழாவின் '''தமிழி''' ஆவணப்படம் -வீடியோ

தொடரும்

Saturday, October 12, 2019

கீழடியிலிருந்து இலங்கையிலுள்ள தம்பலகாமம் வரை -வீடியோ

இலங்கையின் முக்கிய தமிழ் எழுத்தளாரில் ஒருவரான ரஞ்சகுமாரும் அவரின் நண்பரும் இது பற்றி உரையாடுகிறார்கள்

Thursday, October 10, 2019

இலங்கையை காட்சிபடுத்திய சர்வதேச திரைபடங்களின் ஒளி காட்சிகள்-வீடியோ

Saturday, September 21, 2019

தமிழர்களின் பெருமைகள் கீழடியில் இன்னும் புதைந்து இருக்கின்றன-வீடியோ

Sunday, September 15, 2019

எம்.எஸ் விஸ்வநாதனுக்கு அஞ்சலி -alex in wonderland stand up comedy-வீடியோ

தனி நகைச்சுவை நடிப்பு சிறுவயதில் சக்கடத்தார்,டிங்கிரி சிவகுரு நம்ம கே.எஸ் பாலசந்திரன் போன்றவர்களை பார்திருக்கிறோம் ..பின்னர் சன் டிவி விஜய் டிவி வகையறாக்களூடாகவும் பார்திருப்போம்.

 Alexander Babu என்பவரின் தனி நடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சி தற்சமயம் யூரூயுப்பில் பார்க்க கிடைத்தது
..சற்று வித்தியாசமாக இருந்தது

..இந்திய ஆங்கில மொழி பார்வையாளர்களை மையமாக கொண்டு நிகழ்த்துவதாக இருந்தாலும் என்னை போன்றவர்கள் கூட விளங்க கூடியளவான நிகழ்ச்சி தான்

. இவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் அருகிலுள்ள குக் கிராமத்தில் பிறந்து அமெரிக்காவில் ஒரு மென் பொருள் என்ஜினியாராக பணியாற்றி அதை உதறி தள்ளவிட்டு இந் நிகழ்ச்சிகளை செய்து வருகிறாராம்

..அவர் ஒரு யோகா ஆசிரியரும் கூட

 அவரிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் .பாடுகிறார் சகல இசை கருவிகளை கையாள்கிறார்..கதாகலபட்சம் செய்கிறார் கர்நாடக கச்சேரி செய்கிறார்.

 அவருடைய நான் பார்த்த சில தனி நடிப்பு யூடியுப் வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்

Sunday, September 01, 2019

Thursday, August 08, 2019

இந்த தவறுகளை யாரும் செய்யாதீங்க.. பல வருடங்கள் முன்பே மன்னிப்பு கேட்ட சரவணன்-வீடியோ

மன்னிப்பு கேட்பவன் மனிதன் … மன்னிக்க தெரிந்தவன்... கடவுள் -கமல்ஹாசன் -

 கமல் சார் விஜய் டிவிக்காரன் இது பிசினஸ் தலையிடாதயுங்க என்று சொன்னால்

 அன்பே சிவம் திரைபடத்தில் மாதவனுக்கு சொன்னதை நினைச்சு பாருங்க கமல் சார்


  கமல் மாதவனைப் பார்த்து ‘வெளிநாட்டு கம்பெனிகளோட பொருட்களை டிவியில கூவி விக்குற selfish கூலி நீ’ என சொல்ல, ‘அது என் business.. அதைப் பத்தி, பேசாதீங்க’ என்பார். அதை கேலி செய்யும் வகையில், ‘சரி..

. பிசினஸ் பிசினஸ்ன்னு எல்லாத்தையும் தூக்கி குடுத்துட்டா எப்படி...? இப்போவே அவன் மஞ்சள், பாஸ்மதி அரிசி எல்லாம் தனதுன்னு சொந்தம் கொண்டாடுறான்… 

நீங்க பாட்டுக்கு காசு குடுக்குறான்னு குனிஞ்சு குனிஞ்சு சலாம் போட்டுட்டே இருந்தீங்கன்னா, உங்களுக்கு இருக்குறது முதுகுத்தண்டா இல்லை ரப்பர் துண்டான்னு சந்தேகம் வரும்ல?’ என சொல்வார்.

Thursday, August 01, 2019

Monday, July 15, 2019

Sunday, July 07, 2019

லண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ

இந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறையே அரசி விக்னேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஜெகவன் , எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏனைய பாத்திரங்களான டாக்டர் ராங், திருமதி லிண்டே, அன்னா மரியா மற்றும் ஹெலெனா ஆகிய பாத்திரங்களில் குரும்பச்சிட்டி ஆர்.ராசரத்தினம், பவானி சத்தியசீலன், மாலினி பரராஜசிங்கம், கனித்தா உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்களில் கனித்தா உதயகுமார் தவிர ஏனையோர் ஏற்கனவே நாடகத்துறையில் அனுபவம் பெற்ற தேர்ந்த நடிகர்கள். பல்கலைக்கழக மாணவியான கனித்தா உதயகுமார் அண்மையிலேயே தன்னை இத்துறையில் ஈடுபடுத்திக்கொண்டவர். நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர். 



 'ஒரு பொம்மை வீடு' இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கெல்லாம் முன்னோடியான நாடகம் நாடகத்தின் முக்கிய ஆளுமை நோரா. வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பான பாத்திரம். குழந்தைகளுடன் தன் அன்புக் கணவனுடன் வாழுமொரு பெண் , அவனது நலன்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவனுக்கு உண்மை கூறாது மறைத்த பெண், அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் , அதற்கு முற்பட்ட காலத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தான் ஒரு பொம்மையாகவே தான் வாழ்ந்த சமுதாயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததை உணர்ந்து , தன் சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன், சுதந்திரமாகத் தன்மீது பிணைக்கப்பட்டிருந்த தளைகளையெல்லாம் உடைத்து (திருமண பந்தமுட்பட) வாழப்புறப்படுவதுதான் நாடகத்தின் மையக்கரு.--- நன்றி -கிரிதரன்

Saturday, June 22, 2019

குதூகலிக்கும் 50 +plus'..அந்த காலம் route 750 பஸ் க்கு பெயரே வசந்த மாளிகை-வீடியோ

Friday, June 21, 2019

இந்த யோக பயிற்சி ...மிக எளிமையானது ...பல பலன்களை தரக்கூடியது -வீடியோ

Saturday, June 15, 2019

புளித்த மா சண்டையும் ஜெயமோகனும் -வீடியோ

Wednesday, June 12, 2019

Friday, June 07, 2019

தமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ

Wednesday, June 05, 2019

தலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ

சாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் சமீபத்தில் நடந்த இளையராஜாவின் நிகழ்ச்சியொன்றில் மேடையில் தண்ணி கேட்டவர்களுக்கு தண்ணி கொடுக்க வந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த சம்பவம் பலர் அவரை கேள்விக்குள்ளாகியிருக்கறார்கள்

..அவர் இசை மேதையாக இருக்கலாம் ..அவர் சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்து ரசித்தது..அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்

 ஞான செருக்கு ,வித்யா கர்வம் இருக்கும் மேதைகளுக்கு என்று பலர் சப்பை கட்டுகிறார்கள்

 இப்படித்தான் டிஎம் செளந்திரராஜனக்கும் தான் பெரிய பாட்டுக்காரன் என்று  வித்யா கர்வமாம்

இலங்கையில் 80 களில் டிம் செளந்திரராஜன் மேடையில் இப்படி நடந்த கொள்ள இலங்கை தமிழ் ரசிகர்கள் முறியடித்து இருந்தனர்

டிஎம்ஸ் க்கு அவரது திறமையில் அபார கர்வமாம் அந்த காலம் . அந்த வித்யா கர்வம் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டியது தான்

. இலங்கையில் சுகதாச ஸ்டேடியத்தில் வந்து ஒரு நிகழ்ச்சி செய்யும் பொழுது அதற்கு கே.எஸ் ராஜா அறிவிப்பாளராக இருந்தார்.

யாராப்பா ஏனப்பா எனக்கு ஏன் அறிவிப்பாளர் நான் சிவாஜிக்கு குரல் கொடுத்தனான் எம்ஜிஆருக்கு குரல் கொடுத்தனான் என்று ஏளனமாக சொல்ல.

.அதை கேட்டு ராஜா மூத்த கலைஞரை மதித்து வழி விட ..

ஆனால் அங்கு கூடி இருந்த ரசிகர்கள் ராஜா, ராஜா என்று கோரஸ் இட மீண்டும் ராஜா வந்து தான் நிகழச்சியை இலகுவாக ஆரம்பிக்க கூடியதாக இருந்த்து

Saturday, June 01, 2019

எரிக்கப்பட்ட அறிவுக் கோயில் ,38 வருடங்கள் இன்றுடன்..அணையா நினைவுகள் -வீடியோ

எரிக்கப்பட முன் இருந்த நூலக சூழலில் ஒரு மாலை நேரத்தை நினைத்து நினைத்து பார்க்கிறேன் வெறும் மங்கலாகவே தெரிகிறது

 .அப்படியிருந்தும் அதனூடாக ஊன்றி பார்த்தால் சுப்பிரமணிய பூங்காவில் நேரம் சொல்லும் றேடியோ 

அதன் பின் வரும் மெதுவாக உடலை வருடும் சினிமா பாடல்

 சைக்கிளில் மடித்து சுருட்டிய கொப்பியுடன் அவசரமா டியூசனுக்கு வேண்டா வெறுப்பாக செல்லும் பொடியள்

 மத்திய கல்லூரி மைதானத்தில் பயிற்சி எடுக்கும் பொடியள்

 மற்றும் விளையாடும் மாணவர்கள் மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை விடுதியின் முன்பாக உள்ள மதிலிற்க்கு பாரமாக இருந்து கொண்டு அரட்டை அடிக்கும் அக்கல்லூரி உயர்தர மாணவ பிரபலங்கள் 

 முனியப்பர் கோவிலுக்கும் வரும் பெட்டையள்களின் கண் குடுப்பை தரிசிக்க அவசரமாக செல்லும் பொடியள்
 நூலக வாசலில் வரவேற்பாளனோடு அரட்டை அடித்து கொண்டு இருக்கும் சில பெட்டையள் 
 விளங்காத போரடிக்கும் மு.வரதராசரின் புத்தகத்தை நூலகத்தில் இரவல் எடுத்து கொண்டு அவசரமாக சைக்கிள் தரிப்பிடத்துக்கு செல்லும் நண்பர்கள் 
 சற்று மேலாக சென்றால் படிகளில் பயந்து பயந்து பேசிக்கொண்டு காதலிக்கும் ஜோடிகள் 
 ஒரு பக்கத்தில் தரப்படுத்தலுக்கு எதிரான அஸ்திரத்தை தேடிக்கொண்டு இருக்கும் மாணவர்கள் ..அப்படியொரு மயான அமைதி இருக்கும் படிக்கும் மற்றும் உதவி குறிப்புகள் இருக்கும் பகுதியிலை 

ஒரு குண்டூசி விழுந்தாலும் பெரிய ஒலியுடன் கேட்கும் .இங்கு தானோ புத்தர் இங்கு தான ஞானம் பெற்றாரோ என்று தோன்றும் எதிரே கேட்போர் கூடம் 
..எதாவது கருத்தரங்கு .கூட்டம் போன்ற நாட்களில் திறந்து இருக்கும்

 கீழே புத்தகம் இரவல் எடுக்கும் பகுதி எதிர் பக்கம் செய்தி பத்திரிகைகள் சஞ்சிகைகள், அப்படி வந்த சஞ்சிகைகள் இப்ப காணமால் போயிட்டன என
 நினைக்கிறன் .

.பொம்மை பிலிமாலாயா ,readers digest,அதே சாயலில் வரும் தமிழ் சஞ்சிகை .மஞ்சரி .சிங்கப்பூரில் இருந்து வரும் உயர் தர தாளில் அச்சடித்து வரும் சினிமா சஞ்சிகை (பெயர் மறந்து விட்டது),கணையாழி, மல்லிகை ,சிரித்திரன் ,கலகலப்பு ,இந்திய குமுதம் பாணியில் வெளியில் வந்த இலங்கை சஞ்சிகை மாணிக்கம் ,அம்புலி மாமா,சந்தாமாமா ,குஷ்வந்த் சிங்கின் illustrated weekly of india,லண்டனில் இருந்து வந்த லண்டன் முரசு என்ற சஞ்சிகை ( ஜநாவுக்கு நுழைந்த வைகுந்தவாசனின் தம்பி ஆசிரியாக கொண்டது) உத்தியோகபூர்வமாக வைக்காவிடின் சிவாஜி ரசிகர்களால் வெளியிடப்படும் சிம்ம குரல் என்ற பத்திரிகையும் எம்ஜிஆர் ரசிகர்களால் வெளியிடப்படும் பத்திரிகையும் சிலவேளை இருக்கும் 

 80 களில் இடம் பெயர்ந்த பல்கலைகழக மாணவர்களால் 9 பேர் சாகுவரை உண்ணாவிரதம் இருந்து கடத்தபட்டு ஒரு நாடகம் யாழ் பல்கலைகழத்தில் நடந்த்து யாவரும் அறிந்த்தே

 அதன் பின்னர் யாழ் மேல் தட்டு வர்க்கத்தினர் நீலன் திருச்செல்வத்தின் அனுசரனையுடன் அந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய மாணவ நிர்வாகத்தின் பிரநிதகளை ஜேஆருடன் சந்திக்க ஒழுங்கு செய்தனர்

 இடம் பெயர்ந்த பல்கலைகழக மாணவர்கள் அப்பொழுது வைத்த கோரிக்கை சகல பீடங்களும் வடக்கு கிழக்கில் உருவாக்கி அங்கு சகல தமிழ மாணவர்களையும் அங்கு கல்வி கற்க ஒழுங்கு செய்ய வேண்டும் என்று அந்த சந்திப்பில் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் மாணவர்களுடன் கலந்து கொண்டார் ..

.அப்படி உரையாடல் நடந்து கொண்டிருக்கு சந்தர்ப்பத்தில் சட்டபிரிவு பீடம் அமைவது பற்றி வரும் பொழுது அப்போதைய பிரதி சட்ட அமைச்சராகவும் இருந்த ரனில் விக்கிரமசிங்கா சட்டபீடம் எல்லாம் உடனடியாக வைக்க இயலாது அதுக்கு உரிய சட்ட புத்தகம் அடங்கிய நூலகம் எல்லாம் அமைக்கோணும் என்று கூறினார் 

 அப்பொழுது எம்பெருமான் அமிர்தலிங்கம் என்ன கூறி சலசலபை உருவாக்கினார் தெரியுமா 
 ஜயோ என தலையில் கையில் அடிச்சப்படி எனன அருமையான சட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் இருந்த்து அதை எரிச்சு போட்டியளே என்று ?

Thursday, May 23, 2019

இனிமேல் தானே பார்க்க போறீயள் இந்த காளியோடை ஆட்டத்தை -மோடி நடனம்

Thursday, May 09, 2019

Wednesday, May 08, 2019

பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி (ஞாபகம் வருகிறதா) -வீடியோ

Tuesday, April 23, 2019

சரோஜா- தமிழ் சிங்கள திரைபடம்- FULL VIDEO ( பல விருதுகளை பெற்ற திரைபடம்)-வீடியோ

தமிழ் சிங்கள இரு சிறுமிகளின் பாச போரட்டத்தை மைய படுத்தி எடுக்கப்பட்ட திரைபடம் ..இந்த திரைபடம் வந்த காலம் யுத்தம் நடைபெற்ற காலம் 2000 ஆண்டளவில்

CCTV FOOTAGE - இலங்கையில் ஈஸ்டர் குண்டுதாரி CHURCH க்குள் நுழையும் காட்சி-வீடியோ

Friday, April 12, 2019

இந்த பச்சை புள்ளையை போய் பிஜேபியின்ரை பி டீம் என்றாங்களே ..பாவிகள்-video

Wednesday, April 03, 2019

5 நொடிகள் போதுமாம் -வாழ்க்கையில் மாற்றம் பெறலாமாம் (விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டதாம்)-வீடியோ

Mel Robbins இவர் முன்னாள் CNN தொலைக்காட்சியின் ஒளிபரப்பாளர்....இவருடைய 5 செக்கன் rule விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டது என்று சொல்லப்படுகிறது.

Sunday, March 24, 2019

Wednesday, March 06, 2019

Wednesday, February 13, 2019

Friday, February 08, 2019

யாழ்ப்பாண மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா? (යාපනේ මිනිස්සු ඇත්තටම නිදහස්ද?)-வீடியோ

இந்த MR WORLD தமிழனின் உணர்ச்சிகரமான பேச்சு -வீடியோ

Saturday, February 02, 2019

''நினைவுகள் மரணிக்க முன்'' ஆவணபடம் ..மலையக தமிழர்களின் பங்கு ஈழ போரட்டத்தில்-வீடியோ

தமிழா..தமிழா ..தமிழ் பேசு ..தடைகள் கடந்து தமிழ் பேசு-வீடியோ

Tuesday, January 29, 2019

1979ஆண்டு இலங்கை வந்த இளையராஜாவுடன் அப்துல் ஹமீத் பேட்டி - ஒலிச்சித்திரம்

Wednesday, January 23, 2019

இணையத்தை கலக்கும்'' very very bad '' பாடல் ..ஆனால் பாடல் very very good -வீடியோ

Saturday, January 19, 2019

LEAKED FOOTAGE-யாரைத்தான் விட்டது மன அழுத்தம் .பிரிட்டிஸ் நாட்டு தலைவி படும் பாடு-வீடி#ஓ

Saturday, January 12, 2019

Sunday, December 30, 2018

comedy is very சீரியஸ் பிசினஸ்-வீடியோ

Tuesday, December 25, 2018

எதிர்பாராத பந்து வீச்சுக்கு திணறும் துடுப்பாட்டுகாரர் மாதிரி திணறினாரா கமலஹாசன் -வீடியோ

கமலை ஸமிருதி ராணி அண்மையில் நடந்த விவாதமொன்றில் தோற்கடித்தார் என்று இப்பொழுது சமூக வலை தளங்களில் ஒரு கேலியும் கிண்டலுமாக கமலை போட்டு தாக்கி கொண்டிருக்கின்றனர்

 அந்த விவாதத்தை பார்க்கும் பொழுது இந்த பிஜேபி யூனியன் மந்திரியுடன் ஏன் இந்த அடி வாங்கி கொண்டிருக்கிறார் என்று  ஒரு சந்தர்பத்தில் சங்கடமாய் இருந்தது ,,

ஆரம்பத்திலேயே நிலைகுலைய வைத்து விட்டால் எவரையும் விவாத்த்தில் வென்று விடலாம் என்பதற்க்கு இந்த விவாதம் ஒரு உதராண்ம்

 சில காலத்துக்கு முன் இந்த ஸ்மிருதி ராணியின் பொய்யான கல்வி தகமை பற்றி சர்ச்சை வந்தது ஞாபகம் வருகுது
இந்த விவாதத்தில் கமலஹாசனுக்கு எதிராக நெறியாளர் அர்னாப் செய்த சதி பற்றி விளக்கும் இன்னொரு காணொளி கீழே
கமல் சுட்டி காட்டி புளாகிங்கத படும் centralism அரசியல் பிரான்சிலும் கொலம்பியாவிலும் இப்பொழுது அடி வாங்கி கொண்டிருக்கிறது


 ஸ்மிருதி ராணி கமல் முழு விவாதத்தை பார்க்க விரும்பின் கீழே

Sunday, December 09, 2018