இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Wednesday, June 18, 2014
Friday, June 13, 2014
Thursday, June 12, 2014
Tuesday, June 10, 2014
திருநங்கைகள் பற்றிய நல்லதொரு விவாதம் நீயா நானாவில்-வீடியோ
திருநங்கைகள் பற்றிய நல்ல தொரு விவாதம் நீயா நானாவில்
மேலைதேய நாடுகளிலும் பெருவாரியாக திருநங்கைகளை கண்டிருக்கிறோம் .
ஆனால் இலங்கையில் இந்த திருநங்கைகள் இதே பிரச்சனைகள் வெளியில் வந்திருக்க வேண்டுமே..பொதுவானவையாக குறிப்பிடுவது என்றால் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தல் , பிச்சை எடுத்தல் , பாலியல் தொழில் செய்தல்
பள்ளிக்கூடங்களில் சிலரை கூட படிப்பவரை கண்டிருந்தாலும் முற்றும் முழுவதுமாக பெண்ணாகவோ மாறியவரை கண்டது குறைவு
கூடிய சனத்தொகையின் வீதத்துக்கு ஏற்ப அவர்களின் வீதமும் கூட தெரிகிறார்கள் என்று ஒரு வாத்த்துக்கு ஏற்று கொண்டாலும் அந்த சனத்தொகையின் வீத்த்துக்கு ஏற்பாவாது இது இலங்கையில் அதுவும் குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதியில் தெரிந்திருக்கோணும். பிரச்சனைகள் வெளியில் வந்திருக்கவோணும் ,,,அப்படி வந்த்தாக எனக்கு தெரிந்த வரையில் இல்லை
அப்ப ஒரு முடிவுக்கு வரலாமா .
..சனத்தொகையின் அடிப்படையில் இலங்கையிலும் திருநங்கைகள் அந்த சனத்தொகையின் அளவுக்கு ஏற்ப இருக்கிறார்கள் .
ஆனால் ..பெற்றோர்கள் வீட்டை விட்டு துரத்துவது இல்லை
பிச்சை எடுக்க வேண்டி தேவை இருக்கவில்லை
பாலியல் தேவை செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை
குழுவாக சேர்ந்து இருக்க வேண்டிய விசயம் இருக்கவில்லை
இதனால் இந்த விசயத்தில் இலங்கை பெற்றோரை மற்றும் சமூகத்தை கொஞ்ச நாகரிகம் அடைந்த முற்போக்கானவர்களாக கொள்ளலாமா
Friday, June 06, 2014
Wednesday, June 04, 2014
Tuesday, June 03, 2014
இலங்கையின் வடக்கு...கிழக்கு..மலையக.. தமிழ் ,முஸ்லிம் ,பறங்கியர்களின் பாரம்பரிய கலைகள் -வீடியோ
மலையகத்தில் பிரபலமான கூத்து அதன் ஒரு பகுதி
மட்டகளப்பு வாழ் பறங்கிய இன மக்களின் பாரம்பரிய நடனம்
வடபகுதி மக்களின் பறை மற்றும் ஒப்பாரி பாடல்
மட்டகளப்பு தமிழர்களின் பாரம்பரிய drum நடனம்
மூதூர் திருகோணமலை பகுதியிலுள்ள தமிழர்களின் சிலம்பாட்ட கலை
கிழக்கு மாகண முஸ்லிம்களின் பாரம்பரிய கலை
Monday, June 02, 2014
Thursday, May 29, 2014
Saturday, May 24, 2014
Tuesday, May 20, 2014
Monday, May 19, 2014
42 வது பெர்லின் இலக்கிய சந்திப்பு -மு .நித்தியானந்தன், ஷோபாசக்தி,மற்றும் லிவிங் ஸ்மைல் வித்யா வின் உரைகள்-வீடியோ
Friday, May 16, 2014
Thursday, May 15, 2014
Wednesday, May 14, 2014
Tuesday, May 13, 2014
புதுமைபித்தனின் சிறுகதை ''' செல்லம்மாள்''' காட்சி வடிவில்-வீடியோ
http://azhiyasudargal.blogspot.co.uk/2009/07/blog-post_6534.html
பொதுவாக தீவிர வாசிப்பு என்னிடம் இல்லை என்று எனது பால்ய நண்பர்கள் ஒரு குற்றச்சாட்டாக வைப்பதுண்டு ..ஆனால் எதையும் யாரும் விவரிக்கும் பொழுது உன்னிப்பாக கேட்க தவறுவதுவில்லை,,
ஒரு ஜெயகாந்தன் ,ஒரு இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களுக்கு மேல் வாசித்த்து இல்லை ஒரு மட்டுபடுத்தபட்ட வாசிப்பு தான் இருந்த்து . ஆனால் எனது வாசிப்பு குறைவு பற்றி புலம் பெயர்ந்த காலங்களில் கூட அந்த கவலை இருந்தது. தமிழ் சிறுகதையின் பிரம்மா என்ற புதுமைபித்தனை முன்பு கேள்விப்பட்டாலும் புலம் பெயர்ந்த பிறகு தான் வாசித்து இருக்கிறேன் .அவரின் சிறுகதைகளை வாசித்தால் பிறகு எந்த சிறுகதைகளை வாசித்தாலும் வெறுமையாக தான் இருக்கிறது எனக்கு ..அப்படி அவரின் சிறுகதைகள் காலத்தை வென்றவை ..
அவரின் சிறுகதைகளை திரும்ப திரும்ப வாசிக்கும் பொழுது ஒவ்வொரு தரமும் உங்களுக்கு புது புது முடிச்சு அவிழும் அனுபவம் ஏற்படும்...அவரின் சிறுகதை ஒன்றான செல்லம்மாள் என்ற சிறுகதையின் காட்சி வடிவத்தை பார்க்க கிடைத்த்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்
கீழே புதுமைபித்தனின் கதைகள் அடங்கிய இணைப்பு கீழே இருக்கிறது
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0389_01.html http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0389_02.html
Monday, May 12, 2014
Sunday, May 11, 2014
Friday, May 09, 2014
ரஜினி என்னய்யா ரஜனி..1958 யிலேயே தூள் கிளப்பும் சிவாஜியின் ஸ்டையில்-வீடியோ
கீழே இருக்கும் வீடியோ 1958 ஆண்டு வெளிவந்த உத்தமபுத்திரன் என்ற படத்தில் ''யாரடி நீ மோகனி'' என்ற பாடல் கமலஹாசனே நேரில் சிவாஜியை கேட்டருந்தார் .
எப்படி அந்த காலமே நாங்கள் 70 -80களில் செய்ததை செய்திருக்கிறீர்கள் என்று . பாடல் முடியும் தறுவாயில் சிவாஜி போடும் கைதட்டலையும் அந்த ஸ்டப்பையும் குறிப்பாக குறிப்பிட்டு
Monday, May 05, 2014
Friday, May 02, 2014
Wednesday, April 30, 2014
Monday, April 28, 2014
Saturday, April 26, 2014
Friday, April 25, 2014
Tuesday, April 22, 2014
பிரபல சிங்கள நடிகர் விஜயகுமாரதுங்கவும் நடிகை லட்சுமியும் இலங்கையின் ரம்மியமான சூழலில்-வீடியோ
இலங்கையின் பிரபல சிங்கள நடிகர் விஜயகுமாரதுங்காவும் தென்னிந்திய பிரபல நடிகை லட்சுமியும்
விஜயகுமாரதுங்கா ,,முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திராக பண்டாரநாயக்காவின் கணவர் ஆவார்
இரண்டாவது வீடியோ துண்டத்தில் இருக்கும் காட்சி எம்ஜிஆரூக்காக பிரபல ஹிந்தி பாடகர் மொகமட் ரபி பாடும் பாடல்
Saturday, April 19, 2014
Friday, April 18, 2014
RARE -1970 களில் ஒளிபரப்பிய செய்தி தொகுப்பு -வீடியோ
Thursday, April 17, 2014
புத்தி கெட்ட இராசரெல்லாம் எம்மாடியோ...எனக்கு பூவுகொண்டு வாராயிலே எம்மாடியோ-வீடியோ
Tuesday, April 15, 2014
Sunday, April 13, 2014
Saturday, April 12, 2014
Thursday, April 10, 2014
1954 இல் நவரத்தினசாமியின் பேட்டி- வல்வையிலிருந்து வேதாரண்யம் வரை-வீடியோ
இவர் இலங்கை வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டி மேலே உள்ள லிங்கில் உள்ளது ,
அவரே பற்றிய மேலதிக தகவல்கள் தேவைபடின் கீழ் உள்ள லிங்கில் அழுத்தி பார்க்கவும் http://www.vadamarachi.com/articles/sports/navaratnasamy.pdf
Wednesday, April 09, 2014
70 களில் யாழின் பசுமை நிறைந்த நினைவுகள்- ஞாபகம் வருதே என்கிறார் ஒரு பழைய மாணவன்-வீடியோ
அக்கால இளைஞர்களின் தலை அலங்காரம் ,பெல்பொட்டம் உடை அணியும் முறை மற்றும் பலவற்றை ஞாபகபடுத்த வைக்கிறது.
மணிக்கூட்டு கோபுரம் ,சுப்பிரமணியபூங்கா, யாழ் மத்திய கல்லூரி ஆரம்ப பாடாசாலை மற்று ஹாஸ்டல் முன் இளைஞர்கள் கூடுவது எல்லாம் 70களை கண் முன் நிற்க வைக்கிறது...
.சில புகைபடங்களை கஸ்டபட்டு உற்று நோக்கினால் சில பழைய கிரிக்கட் வீரர்கள் உதைபந்தாட்ட வீர்ர்களை சாடையாக ஞாபக படுத்த முடிகிறது
...இந்த புகைபடங்களை தொகுத்து வீடியோ வாக்கின அந்த மத்திய கல்லூரி பழைய மாணவனுக்கு நன்றிகள்
இதில் கிரிக்கட் வீரர் மித்தரகுமார் ..இப்போதைய நாடு கடந்த தமிழீழ தலைவர் முன்னாள் யாழ் மேயர் விஸ்வநாதனின் மகன் உருத்திரகுமாரின் போன்ற பல இப்போதைய பிரபலங்களின புகைபடங்களுமி இதில் இருக்கின்றன
Tuesday, April 08, 2014
Sunday, April 06, 2014
20-20 கிரிக்கட் மட்ச் தான் ..ஆனால் இது நட்சத்திர கிரிக்கட் விளையாட்டு-வீடியோ
. இலங்கை உத்தியோக பூர்வமாக சர்வதேச கிரிக்கட் போட்டிக்கு தேர்வாக முந்தி வெஸ்ட இண்டீஸ் ,இந்தியா ,நியூசிலந்து இங்கிலாந்து அவுஸ்திரேலியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டும் தான் ..ஆடிக்கொண்டு இருந்திருக்கு என்று நினைக்கிறன் தமிழர்களை இலங்கை அணியில் சேர்க்காத மாற்றந்தாய் மனப்பான்மையும் அந்த கால கள அரசியல் நிலமையும் பொதுவாக இந்திய அணியை தங்கள் ஆதரவு அணியாக கொண்ட ரசிகர் கூட்டம் இருக்கும்...இலங்கை அணியில் றோயல் டயஸ் மெண்டிஸ் இருந்த காலம் ஒரு பொற்காலம் என்று நிநினைக்கிறன் . அதே கால கட்டத்தில் இந்தியா அணியில் கவாஸ்கர் ,அவரது மைத்துனர் விஸ்வநாத் அப்பொழுது தான் அறிமுகமான ஆறாவதோ ஏழோவதோ வந்து கலக்கும் ஓல் றவுண்டர் கபில்தேவ் ஆதர்ச நாயகர்களாக இருந்தார்கள் .
இந்தியாவில் இந்த கிரிக்கட் நடந்தால் பம்பாய் , டெல்லி ,கல்கத்தா பெங்களூர் சென்னை ,கான்பூர் போன்ற நகரங்களில் நடக்கும் , இந்த நிகழ்ச்சிகளை ஆகாஸ்வாணி நேரடி அஞ்சலி செய்யும் .என்ன கொடுமை என்னவென்றால் அரை மணித்தியாலத்துக்கு ஒரு முறை ஆங்கிலத்தில் இருந்து வர்ணனை ஹிந்திக்கு தாவி விடும், ஹிந்தியில் நடக்கும் பொழுது நேர்முக வர்ணணையாளிரின் ஏற்ற இறக்கத்திலும் சனங்களின் கோரஸ் சத்த்த்திலும் தான் ஏதோ நடந்து விட்டது ஊகித்து பின்னர் ஏக் தோ தீன் சாரங்கலியே என்ன கோதோரி எல்லாம் தெரிய விளங்க கத்து கொண்டோம் .
ஆனால் சென்னையில் கிரிக்கட் நடை பெறும் பொழுது தான் கொஞ்சம் சந்தோசமாக இருக்கும் முழுக்க முழுக்க தமிழில் வர்ண்ணை இருக்கும் ..இப்பவும் ஞாபகம் இருக்கிறது சேப்பாக்க மைதானத்தில் நடக்கும் கிரிக்கட்டை மணி என்ற வர்ண்ணை யாளர் கர்ச்சித்து கொண்டு இருப்பார் ஹரியானா பெற்றெடுத்த சிங்கம் கபில் தேவ் வால்ராஜா முனையிலிருந்து பந்து வீசுகிறார் என்று கொண்டு.
வெங்கட் ராகவன் கப்டினாக இருந்த பொழுது என்று நினைக்கிறேன் மேற்கிந்தியதீவு டீம் சென்னை வந்த பொழுது அந்த டீமில் ஒரு தமிழர் விளையாடி இருந்தார்.அவரால் தமிழை முழுமையாக பேசமுடியாமால் இருந்த பொழுதும் அவரது சுத்த தமிழ் பெயராக இருந்த்து , கரும்பு தோட்டத்து வேலை செய்வதற்க்கு பிரிட்டிசரால் அழைத்து செல்லப்பட்டவர்கள் அவரின் மூதாதையினர்கள். அவரது பெயர் மறந்து விட்டது .மேற்கிந்திய டீமுக்கு காளிசரண் கப்டீனாக இருந்த பொழுது அவர் விக்கட் கீப்பராக வந்திருக்க வேணும் .அவரது படத்தை விகடனோ குமுதம் அட்டைபடமாக போட்டு பிரசுரித்து கெளவிரவித்த்து என்று நினைக்கிறன் .
டெஸ்மச் நடக்கும் ஜந்து நாட்களில் காவஸ்கர் சொட்டி சொட்டி நூறை தொட்டும் தொடாமால் இருக்க அவரோட கூட வரும் ஓபினிங் மட்டை வீரர் வெங்கஸ்கார் சொட்டி கொட்டிருக்க ..விஸ்வநாத் ஒரு போர்முக்கு வந்திட்டால் அவுட்டாக்கிறது கஸ்டம் நாலு நாலாக வெழுத்து கொண்டு இருப்பார் இவை மூன்று பேருமே ஜந்துநாள் விளையாட்டில் மூன்று நாளை எடுத்து விடுவினம்... அதே கால கட்டத்தில் இங்கிலாந்தின் போத்தம் அவுஸ்திரேலியாவின் போர்டர் பாகிஸ்தானின் இம்ரான் கான் போன்றோர் ஆதர்ச நாயகர்களாகிருப்பர்
யாழ் மத்திய கல்லூரி கிரிக்கட் வீரர் நகுலேஸ்வரனின் பந்து வீச்சு முறையை பாகிஸ்தான் வீரர் வாசிம் விக்ரமோடு ஒப்பிட்டு பேசுவர் , ஹாட்லி கல்லூரி மனோகரதாஸ் வசந்த நாதன் போன்றோர் தேசிய மட்டத்தில் விளையாட கூடியவர்கள் என்று பேச்சு அடிபட்டது அத்துடன் தமிழர்கள் என்றதாலையே புறக்கணிக்கபட்டதாக கூறுவர்...
இப்ப கிரிக்கட்டே பார்த்து கனகாலம் ....இப்ப யார் இந்தியா கப்டின் இலங்கை கப்டின் உந்த கிரிக்கட் விளையாடுற நாடுகளின் கப்டின் ஒன்றும் தெரியாது ....
இப்ப எத்தனை நாடுகள் விளையாடுகுது சர்வதேச கிரிக்கட் போட்டியிலை? கனக்க இருக்குமென்று நினைக்கிறன்
பிரபலங்கள் சிலவேளை ஸ்டார் கிரிக்கட் விளையாடுவினம் சிவாஜி ஜெமினி ஆட்கள் கூட விளையாடி இருக்கினம் ..அப்படி ஒரு ஸ்டார் கிரிக்கட் வீடியோ ஒன்று தான் கீழே இருக்கிறது https://www.youtube.com/watch?v=ql5ge_5bXcs
Thursday, April 03, 2014
இந்த ''ராஜஹம்ஸமே" சாதாரண தொழிலாள பெண்ணினது--வீடியோ
Tuesday, April 01, 2014
Sunday, March 30, 2014
சிறப்பு பாடல் -யாழ் இணையத்துக்கு இப்ப 16 வயது-வீடியோ
கம்பியூட்டரில் தமிழ் என்று அதிசயத்துடன் பார்த்து பிரமித்தும் கொண்டு பார்த்து கொண்டும் இருக்கும் பொழுது இந்த யாழ் இணையம் எனக்கு கண்ணில பட்டது . இதில் பங்கு பெறுபவர்கள் கல்வியாளர்களாக இருக்க கூடும் மேதாவிகளாக இருக்க கூடும் நினைத்தேன் ,. நமக்கு இங்கு என்ன வேலை? அதுவும் அழகு தமிழில் எழுதி விவாதிக்கும் பொழுது பிரமிப்பு இருக்காதா என்ன?.. அத்துடன் எனது வாழ்வுயிலில் கம்பியூட்டருக்கும் எனக்கு தொடர்பே இல்லாத நிலையில் இருந்தும் கூட இவர்கள் மாதிரி தமிழ் எழுத மாட்டனா என்ற நப்பாசை ஏனோ எழுந்தது..
. அதிர்சட வசமாக யாழ் இணையம் இலகுவாக அறிமுகபடுத்தி வைத்திருந்த பாமினி உரு தட்டச்சு முறை தமிழில் எழுத பழக்கியது .அதன் மூலம் யாழில் எழுதி பார்த்தேன் .ஆமா நானும் தமிழில் எழுதுகிறேன் என்று சந்தோசம் பொங்க பிறவி பயன் பெற்ற இன்பத்தை அடைந்தேன். அந்த எழுத்தின் சில வரவேற்பு ஊக்கத்தின் மூலம் வலைபதிவை உருவாக்கி எழுத தொடங்கினேன்
. இந்த சிறியோனை தமிழில் எழுத வைத்த யாழ் இணயத்துக்கு எனது வாழ்த்துக்கள் . யாழ் இணையத்தின் பொது கருத்தோடு சில வேளை ஒத்து போக முடியாமால் சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுதும் வலிந்து ஒரு சமரச போக்கை என்னுள் உருவாக்கி யாழ் இணையத்தில் இருந்து தூர போகாமால் அதனுடன் பயணித்திருக்கிறேன் என்று நம்புகிறேன் .
மீண்டும் வாழ்த்துக்கள் யாழ் இணையத்துக்கு
Thursday, March 27, 2014
Saturday, March 22, 2014
கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் ..தண்ணீர் என்ற நாடகத்தின் சில காட்சிகள்-வீடியோ
இன்று உலக தண்ணீர் தினமாம்
மேலே உள்ள கோமல் சுவாமிநாதனின் நாடகத்தை அடிப்படையாக கொண்டு தான் பாலசந்தர் தண்ணீர் தண்ணீர் திரைபடத்தை உருவாக்கினார் .</p>
தண்ணீர் தண்ணீர் திரைபடத்தின் கடைசி காட்சியில் வரும் உருவகத்துக்காக பாலசந்தர் எம்ஜீஆரால் அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக கூட கிசு கிசு பாணியிலான செய்திகள் அப்பொழுது வந்திருந்தன.
கீழ உள்ளது தண்ணீர் தண்ணீர் திரைபடத்தில் அரசு எந்திரத்தின் செயல்பாடு பற்றி கூறும் காட்சி
Friday, March 21, 2014
Wednesday, March 19, 2014
Monday, March 17, 2014
Thursday, March 13, 2014
Tuesday, March 11, 2014
Sunday, March 09, 2014
Tuesday, March 04, 2014
கனடா தமிழ் சிறுவன் ...சாதனை ..சன் சிங்கரில் -வீடியோ
Monday, March 03, 2014
Saturday, March 01, 2014
எரித்துக்கொல்லப்பட்ட பெண் ராகுலுக்கு முத்தம் கொடுத்தவரல்ல-வீடியோ
Sunday, February 23, 2014
Friday, February 21, 2014
Thursday, February 13, 2014
பாலு மகேந்திரா - கமலுக்கு அரங்கேற்றம் நடந்த மேடையில்- வீடியோ
Wednesday, February 05, 2014
ஹிட்லர் தப்பியோடி ஆர்ஜண்டாவில் வாழ்ந்து இறந்தாரா?-வீடியோ
http://www.dailymail.co.uk/news/article-2545770/New-book-claims-THIS-picture-proves-Hitler-escaped-Berlin-bunker-died-South-America-1984-aged-95.html
Friday, January 31, 2014
Thursday, January 30, 2014
Saturday, January 25, 2014
Tuesday, January 21, 2014
Saturday, January 18, 2014
Thursday, January 16, 2014
Sunday, January 12, 2014
Saturday, January 11, 2014
லண்டனில் தமிழ் பெண் மற்றும் இரு குழந்தைகள் சடலங்களாக மீட்பு-வீடியோ
லண்டன் brent பகுதியில் இருந்த வீட்டிலிருந்து 33 வயதுடைய தமிழ் தாய் ஒருவருடைய சடலத்தையும் இரு சிறிய பிள்ளைகளின் சடலங்களை மீட்டுள்ளனர் . பிள்ளைகளுக்கு வயது முறையே 5 வயது .7 மாதமுமாகும் . இந்த சிறு பிள்ளைகள் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று அஞ்சுகின்றனர் பொலிஸ் ..இதற்கு வெளியார் காரணமாக இருக்க முடியாது என்றும் தாயார் தற்கொலை செய்துள்ளார் என்றும் ..மன அழுத்தத்தால் பாதிக்க பட்டிருந்த தாயாரால் இந்த பரிதாப சம்பவம் செய்யப்பட்டிருக்காலாம் என்று பொலிசார் மேலும் சந்தேகிக்கின்றனர்
Thursday, January 09, 2014
Wednesday, January 08, 2014
விண்வெளி ஆய்வாளர்களை ஆச்சரியத்துள்ளாக்கிய லண்டன் தமிழ் மாணவி-வீடியோ
Monday, January 06, 2014
Wednesday, December 25, 2013
லிட்டில் இந்தியா ,சிங்கப்பூர் கலவரம் -வீடியோ
Tuesday, December 24, 2013
Saturday, December 21, 2013
Friday, December 20, 2013
சகாயம் ஜ.ஏ.எஸ் அதிகாரி பேச்சு.-வீடியோ
என்னை எத்தனை முறை மாற்றினாலும் நான் கவலைபடாமல் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் எனது பணியை செய்கிறேன்" என கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் சகாயம் கூறினார்.
Wednesday, December 18, 2013
'''இங்கிருந்து'' - இலங்கையின் மலையக மக்களின் வாழ்வியல் போரட்டத்தை சித்தரிக்கும் திரைபடம் -வீடியோ
பிபிசி தமிழோசையில் இடம் பெற்ற இந்த திரைபட நெறியாளிரின் செவ்விக்கான இணைப்பு கீழே
http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/12/131216_upcountryfilm.shtml
இலங்கையில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்களின் ஒன்றரை நூற்றாண்டு கால வாழ்வியல் போராட்டத்தின் இன்றைய நிலையை குறிப்புணர்த்தும் 'இங்கிருந்து' முழுநீளத் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகாலமாக பேசப்பட்டுவரும் இனப்பிரச்சனை என்ற சொல்லாடல் மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக 'இங்கிருந்து' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுமதி சிவமோகன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் சுட்டிக்காட்டினார்.
மலையகம் என்பது இனப்பிரச்சனையின் ஒரு 'அடிப்படை மூலம்' என்று சுமதி சிவமோகன் சுட்டிக்காட்டுகிறார்.
தேயிலைத் தோட்டத்தை கதைக் களமாகக் கொண்டு, தோட்டத் தொழிலாளர்களை நடிகர்களாகப் பயிற்றுவித்து, இலங்கையின் முன்னணி திரைத்துறைக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை வரலாற்றுப் பின்னணியுடன் அணுகியுள்ளதாக சிவமோகன் கூறினார்.
இங்கிருந்து- திரைப்படத்தின் இயக்குநர் சுமதி சிவமோகன்
மலையக மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்படாத வெளிப் பிரதேசத்து நபர் ஒருவரின் பார்வையில் மலையக மக்களின் பிரச்சனைகள் எப்படி தெரிகின்றன என்கின்ற கண்ணோட்டத்தில் இந்தப் படத்தின் கதை நகர்கிறது.
இந்தியத் தலைநகர் தில்லியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-வது ஆசியப் பெண்கள் திரைப்பட விழாவில் 'இங்கிருந்து' திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளதாகவும் சுமதி கூறினார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறையின் தலைவராக பணியாற்றும் சுமதி சிவமோகன், கடந்த காலங்களில் சில சமூகப் பிரச்சனைகளை குறும்படங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
நன்றி -பிபிசி தமிழோசை
இந்த திரைபடம் பற்றிய மேலும் விவரங்கள் தாங்கிய பதிவின் இணைப்பு கீழே
http://sivasinnapodi.wordpress.com/2013/12/18/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-from-here-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/
Saturday, December 14, 2013
Wednesday, December 11, 2013
கெட்ட பய சார் அவன்-ரஜனி (மீள் பதிவு)

அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர் ரஜனிகாந்த்.
இதே கஸ்துரியார் வீதியூடாக முப்பது வருடங்களின் பின் ராஜா தியேட்டரில் எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுடன் திரும்பி கொண்டிருக்கும் பொழுது அன்றைய சம்பவம் எனக்கு அன்றும் மறக்காமால் ஞாபகத்துக்கு வந்தது .அன்று யார் என்று தெரியாமால் இருந்த நடிகன் இன்று பேச்சிலும் மூச்சிலும் நன்கு பரிச்சியப் பட்ட சூப்பர் ஸ்டாராகி இருந்தார்.இவர் என்று சூப்பர் ஸ்டார் ஆகினாரோ அன்றிலிருந்து நல்ல நடிகன் என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கி கடவுள் என்ற ஸ்தானத்தில் உயர்த்தப் பட்டு சிலுவையில் அறையப் பட்டு இருக்கிறார்.
ரஜனி ஸ்டைல் நடிகர் என்ற அடைமொழிக்குள் அகப்பட்டாலும் கமல் போல நல்லதொரு நடிகன் அவர் .அவருடைய ஆறிலிருந்து அறுபதுவரை அவள் அப்படித்தான் முள்ளும் மலரும் போன்ற படங்களில் தனது நடிப்பாற்றல் மூலம் நிரூபித்தும் இருக்கிறார் .ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்திருக்கும் பொழுது அவரது லட்சிய கனவு ஒரு வெஸ்பா ஸ்கூட்டரும் பிளாட் வீடுமாகவே இருந்தது .இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,பின் அவரே எதிர்பார்க்காத உயரத்துக்கு லட்சங்கள் கோடிகளுடன் சென்று விட்டார்.
70 களில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவில் ஒரு மாறுதல் வந்தது .வெறும் கதாநாயக வழிப்பாட்டுடன் வெளி வந்த படங்களிலிருந்து சிறிது மாற்றம் வந்து டைரக்சன் மற்றும் சினிமா தொழிநுட்பங்கள் கூடிய பொறிமுறையுடன் கூடிய படங்கள் வெளிவர தொடங்கின. பல நாடகங்களை அரங்கேற்றிய பாலசந்தர் தனது நாடகப்பாணியலையே திரைபடங்களை உருவாக்கினார் .70 களில் அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் சினிமாத்தனமான முயற்சிகளை காட்டி தமிழ் திரை உலகுக்கு வித்தியாசமான பக்கத்தை அறிமுகபடுத்தினார். அந்த காலம் பாலசந்தரை சத்தியத்ரேயை பற்றி தெரியாத எங்களுக்கு தென்னிந்திய சத்தியத்ரே என்று ஊடகங்கள் அப்பொழுது பூச்சாண்டி காட்டியது.உண்மையில் சில காட்சிகள் அப்பட்டமாகவே சத்தியத்ரேயின் படங்களில் திருடி தனது படங்களில் தனக்கேற்ற மாதிரி அமைத்து இருந்தார் பின்னர்தான் காலம் தெரியவைத்தது.
வெறும் மசாலா படங்கள் பார்த்த எங்களை போன்ற இளைஞர்களுக்கு சினிமா என்றது வித்தியாசமான தொடர்பு சாதனம் என்பதை அறிமுகபடுத்தியதில் பாலசந்தர் பங்குள்ளது என்பதை மறுக்கமுடியாது. பாலசந்தர் அறிமுகபடுத்திய ரஜனி என்பதால் அவர் பால் அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி இருந்தது . ரஜனியின் மானரிசம் என்பது பலராலும் சிலாகித்து கூறும் வார்த்தை அப்பொழுதும் அல்ல இப்பவும் பேசப்படுகிறது .இந்த ஒரு வகை ஸ்டைல் மூலம் நடிப்பை காட்டும் இம்முறையை ஆங்கில படங்களில் மசாலா பட நாயகன் சார்ள்ஸ் பிறவுன்சன் போன்ற நடிகர்கள் செய்வதை பலர் பார்த்திருப்பார்கள் . நம்ம சிவாஜி கணேசன் கூட இந்த ஸ்டைல் நடிப்பு மூலம் பல படங்களில் நடித்திருக்கிறார் .ஆனால் அவருடைய மிகைபடுத்தல் நடிப்பு காரணமாக அது விமர்சனத்துகு உட்படுத்தபட்டது ,ரஜனியின் ஸ்டைல் நடிப்பு காட்சிக்கு ஏற்றவாறு டைரக்சனுக்கு அடங்கி வெளிப்பட்டதால் ஓரளவு யதார்த்தமாக தெரிந்தது ..அதனால் பலரால் அப்பொழுது சிலாகிக்கப்பட்டது.
ரஜனி உடல் நலம் இல்லாமால் இருக்கிறார்.அத்துடன் அவர் பற்றிய வித்தியாசமான வதந்திகள்,தமிழ் தொடர்புசாதனங்களை இப்ப ஆட்டி படைத்து கொண்டிருக்கின்றன் ...ரஜனிக்கு உண்மையில் நடந்தது என்ன ?என்ற மில்லியன் டொலர் கேள்வியாக ஒலித்து கொண்டிருக்கு.சிங்கப்பூருக்கு மருத்துவத்துக்கு செல்ல முன்பு ஒலிநாடவில் எனக்கு பணம் கொடுங்கிறாங்கள் நடிக்கிறன் ,இதை விட என்னத்தை நான் உங்களுக்கு திருப்பி செய்யப்போறன்.என்று.சொல்லியிருக்கிறார் ..இது தான் உண்மை ..செய்ய நினைத்தாலும் அவர்களின் விடிவுக்கு ஒன்று செய்ய முடியாது என்பது தான்
ரஜனி சாதரண கண்டக்டர் என்று கூறிக்கொண்டாலும் ஒரு பட்டதாரி . பட்டதாரி பட்டத்துக்கு அப்பாற்றப்பட்டு அவர் பல விசய ஞான விடயங்களை தேடி அறிந்திருக்கிறார் .ஜி. கிருஸ்ணமூர்த்தியை பற்றி விவாதிப்பார் ,,தமிழில் புதுமைபித்தன் ஜானகிராமன் ஜெயகாந்தன் போன்றோரை கூட விரும்பி வாசித்திருக்கிறார் ..புலம் பெயர் எழுத்தாள்ர் ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை கூட வாசித்து சிலாகித்து இருக்கிறார் என்று பத்திரிகையில் வந்த கொசுறு செய்தி பார்த்த ஞாபகம்.யோகா தியானம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருபவருக்கு வருத்தங்கள் வரக்கூடாது என்று இல்லை .ஆனால் யோகா மூலம் மற்ற நடிகர்களுக்கு இல்லாத உடல் வாகுடன் இருப்பதால் எந்த அசைவு செய்தாலும் கவர்ச்சியாக மாறுகிறது. இந்த வயது வந்து கூட இவரது இப்பவும் உடம்பை பார்த்தால் கல்லு மாதிரி இருக்கிறது. மற்றும் எந்த உடை அணிந்தால் கூட அழகாகவும் இருக்கிறது.
.இந்த யோகா தியானம் போன்றவற்றை நான் ஒரு கலையாக நினைப்பதால் எனக்கும் சிறு வயதிலிருந்து ஈடுபாடு கூட.. ரஜனியை பொறுத்தவரையில் எனக்கு ஒரு ஆச்சரியம் சந்தேகம் இவ்வளவு காலமும் இருந்து வந்ததது? .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார்? ,,,எப்படி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ?... அண்மையில் எங்கையோ கூறியிருந்தார் தனது வெற்றிக்கு தியானம் தான் முழு காரணமும் என்று..பாபா விசயம், மற்றும் யாரும் கடவுள் என்று சொல்லி கொண்டு திரிந்தால் சாதரண பித்தலாட்டம் செய்பவனாக இருந்தாலும் கூட அவரிடம் போய் ஆசி ஆலோசனை கேட்க போகிறது போன்ற இப்படியான விசயங்களினால் அவர் கோமாளியாக போவதுமுண்டு .அவரை மென்டல் என்று பழிப்பவர்களின் கருத்துகளுக்கு இது வலுவூட்டியதாகவும் விட்டு விடுவதுமுண்டு.
யோகா தியானம் போன்றவை செய்து குடி சிகரெட் அதீத மாமிச பாவிப்புடன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுக்குள் அடங்காமால் இவ்வளவு காலமும் தள்ளி ஒரு வெற்றியடைந்து விட்டார் என்று உண்மை தான் . என்றாலும் அண்மையில் அவரது உடல்நிலை பற்றி வரும் செய்திகள் அல்லது வதந்திகள் எல்லாம் இவர் தோற்று விட்டார் என்பதை உணர்த்துகின்றன..
அவருடைய நோயுக்கு ஊடகங்கள் புது புது காரணங்களை சொல்லுகின்றன். அவர் மேற்கத்தைய மருத்துவத்தை நம்பமால் ஆயுர்வேத மருந்துகளை அதிகம் உட்கொண்டமையாலேயே அவரது கிட்னி பாதித்தது என்பது. எம்ஜியாரும் திடகாத்திரமான உடற்பயிற்சி செய்து உடம்பை வயதான காலங்களிலும் கூட கட்டாக வைத்திருந்தவர் ,வேறு தேவைகளுக்காக தங்க பஸ்பம் சாப்பிட்டதாலையே நோய் வந்தது என்பதுக்கு இது ஒப்பாகும். வேறு ஒரு வட நாட்டு ஊடகம் ஹீந்தி நடிக நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது ஒரு அமர்வில் 9 அல்லது பத்து பெக் மது அபிரிதமாக அருந்துவார் என்று ஆச்சரிய செய்தியை வெளியிட்டுள்ளது. எது எப்படியோ ரஜனியின் மருமகன் தனுஸ் விரைவில் சுகமாகி திரைபடத்தில் நடிப்பார் என்று கூறுகிறார் ..திரைபட செல்வந்த தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு பொன் முட்டை இடும் வாத்து ....அவர்களும் காத்திருக்கிறார்கள்..சாதாரண முட்டைக்கு கூட வழியில்லாத அப்பாவி ரசிகனும் காத்திருக்கிறான்...
ரஜனி சுகமாகி வந்து நடிப்பார் என்று..வாழ்த்துவோம் அவர்களைப் போல
Sunday, December 08, 2013
Thursday, December 05, 2013
Tuesday, December 03, 2013
ஏய் மாமா நீ ஒரு கோமாளி தான்..''கோமாளிகள்''-இலங்கை திரைபடத்திலிருந்து-வீடியோ
மேலே உள்ள பாடல் கோமாளிகள் என்ற இலங்கை திரைபடத்திற்க்காக கண்ணன் -நேசம் குழுவினரால் இசையமைக்கப்பட்டது.மரிக்கார் ராம்தாஸின் இலங்கை வானோலியில் தொடராக வந்த கோமாளிகள் என்ற நாடகமே திரைபடமாக்க பட்டது
கீழே உள்ள பாடல்கள் பிரபல சிங்கள நடிகர்களான விஜயகுமாரதுங்கா (முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் கணவர்) மாலினி பொன்சாகா நடித்த இலங்கை தமிழ் படமான பனிமலரில் இடம் பெற்றது.
Monday, December 02, 2013
இவர் தான் நாயகன் திரைபடத்தின் ''REAL HERO''-வீடியோ
வரதராஜன் முனுசாமி முதலியார்
Varadarajan Muniswami Mudaliar, also known as Vardhabhai (1926--1988) was a Tamilian from Chennai, Tamil Nadu, who rose to become a mafia don in Mumbai, India. Most active in the 1970s, he was the link in the underworld history between old time mafia men such as Haji Mastan. He is also known as One of Mumbai's dreaded Criminal underworld kingpin.
Friday, November 22, 2013
யாழ்ப்பாணத்தில் ஒரு நாள்-வெளிநாட்டு யாத்திரிகினின் பார்வையில்-வீடியோ
இந்த வீடியோவில் ஒரு வெளிநாட்டு யாத்திரிகன் யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் அனுபவத்தை படம் பிடிக்கிறான் . அதில் ஒரு இடத்தில் மதிய உணவு உண்ண ஹோட்டலுக்கு சென்ற பொழுது சாப்பிட்ட முடிந்த பின் கைதுடைக்க ,வாய் துடைக்க முந்திய பழைய பேப்பர் துண்டு கொடுப்பது பற்றி கூறுகிறான்.
இப்படி கூறும் பொழுது ஒன்று நினைவுக்கு வருகிறது 25 அல்லது 30 வருடங்கள் முன்னர் எழுத்தாளர் மணியன் விகடன் பத்திரிகையுடன் முரண்பட்டு இதயம் பேசுகிறது என்ற வாரந்தர பத்திரிகையை தொடக்கி அதற்கு ஆசிரியாராகிறார் , விகடனில் பல நாடுகளுக்கு சென்று பயண கட்டுரை எழுதி இருக்கிறார். அது போல தன்னுடைய இதய பேசுகிறது பத்திரிகை தொடங்கிய பின்னர் இலங்கை பயண கட்டுரை எழுதி இருந்தார். அப்பொழுது யாழ்ப்பாணமும் வந்து யாழ்ப்பாண்த்தை பற்றியும் எழுதி இருந்தார்.
அப்பொழுது தான் அவர் இந்த உலகம் சுற்றி நாடுகளை பற்றி எழுதுவது பற்றி தெரிய வந்தது.அவரது வண்டவாளங்கள் தெரிய வர யாழ் வாசிகளிடம் இருந்து விமர்சனத்தை எதிர் கொண்டார். மேலே உள்ள வீடியோ வில் சொன்ன யாத்திரிகன் மாதிரி உள்ளதை சொல்லாமால் கிண்டலாக சொல்லி இருந்தார் . அவர் அவரது பயணக்கட்டுரையில் இப்படி எழுதுகிறார் நான் யாழில் ஒரு ஹோட்டலுக்கு சென்றேன் சாப்பிட போனேன் சாப்பிட்டு முடிந்த பின் பணியாள் ஒரு துண்டு பேப்பரை நீட்டினார் . நான் படிக்க தருகிறார் என்று நினைத்து வேண்டினேன் .அது ஒரு பழைய செயதி பத்திரிகையின் துண்டு பேப்பர். ஏனப்பா பழைய பேப்பராக தருகிறாய் என்று கேட்டேன் ..அதற்கு அந்த பணியாள் வாசிக்கவில்லை கை துடைக்க என்று கூறி சென்றார் இப்பிடி எழுதி கொண்டு போகிறார்.
(இப்படி மணியன் சொல்வதால் ஒரு கேள்வி எழுகிறது தமிழ் நாட்டில் பழைய பத்திரிகை பேப்பர் இப்படி கை துடைக்க கொடுப்பதில்லையா என்று?)
மணியன் தனது இதயம் பேசுகிறது ஏஜன்டாக தம்பித்துரை அன்சன்ஸ் இடம் வர்த்தகம் பேச வந்த இடத்தில் யாழ் பயணக்கட்டுரை எழுதியதை பார்த்து யாழ் வாசிகள் கிண்டலோ
கிண்டல் அடித்தது ஞாபகம் வருகிறது.
Saturday, November 16, 2013
Monday, November 11, 2013
Saturday, November 09, 2013
Wednesday, November 06, 2013
Tuesday, October 22, 2013
Monday, October 14, 2013
Sunday, October 13, 2013
Saturday, October 12, 2013
Wednesday, October 02, 2013
Saturday, September 28, 2013
கோமாளிகள்,ஏமாளிகள்,புதியகாற்று,அனுராகம்,தென்றலும் புயலும்-இலங்கை தமிழ் திரைபட பாடல்கள்-வீடியோ
Monday, September 23, 2013
Wednesday, September 18, 2013
Friday, September 13, 2013
டிஜிட்டல் தொழிட்பத்தில் நினைத்தாலே இனிக்கும் -முன்னோட்டம்-வீடியோ
ABBA, BONIEY M போன்ற முழு நீள பாடல்கள் அமைந்த படங்களை போல தமிழில் பாலசந்தரால் உருவாக்க படம் தான் நினைத்தாலே இனிக்கும் . இது 34 வருடங்களுக்கு பிறகு தற்பொதைய டிஜிட்டல் முறைக்கு மாற்ற பட்டு விரைவில் வெளியிட இருக்கிறதாம் ...அதனுடைய முன்னூட்டம் தான் மேலே
Friday, September 06, 2013
நவீன நாடக இயக்குனர் பாலேந்திராவின் நேர்முகம்-வீடியோ
பாலேந்திராவின் அவைகாற்று கழக நாடக குழுவில் எனது பால்ய காலத்து நண்பனான ராஜ்குமாரும் நீண்ட காலம் இணைந்திருந்தது
ஞாபகம் வருகிறது . ஆனால் அவன் இப்பொழுது இவ்வுலகில் இல்லை
http://sinnakuddy.blogspot.co.uk/2010/03/blog-post_3460.html







